📅 Saturday, 01 August 2026 IST | ஆடி 16, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Business August 01, 2026 02:32 PM

திருப்பதிக்கு சென்ற தமிழக வேளாண் பட்ஜெட்.! எதிர்பார்ப்பை எகிற வைத்த அமைச்சர்.!

திருப்பதிக்கு சென்ற தமிழக வேளாண் பட்ஜெட்.! எதிர்பார்ப்பை எகிற வைத்த அமைச்சர்.!

தமிழ்நாட்டில் முதல்வர் விஜய் தலைமையிலான தவெக ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வர் விஜய் கடந்த இரண்டரை மாதங்களில் பல்வேறு சிறப்புத் திட்டங்களை கொண்டு வந்த போதிலும், அனைவரின் கவனமும் முதல் பட்ஜெட்டின் மீதே உள்ளது.

வருகின்ற ஆகஸ்ட் 5-ம் தேதி தவெக அரசின் முதல் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. இதனைத் தொடர்ந்து அடுத்த நாள் ஆகஸ்ட் 6-ல் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்நிலையில் வேளாண் பட்ஜெட் நிதிநிலை அறிக்கையின் நகலை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைத்து வழிபட்டார் அமைச்சர் வினோத்.

உலகப்புகழ் பெற்ற திருப்பதி கோயிலுக்கு அரசியல் பிரமுகர்கள் மற்றும் திரை நட்சத்திரங்கள் அடிக்கடி செல்வது வழக்கம். தமிழ்நாட்டில் ஆட்சிப் பொறுப்பேற்ற 2 மாதங்களுக்குப் பிறகு தவெக அரசு சார்பில் முதல் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது.

இதில் எவ்வித பிரச்சினையும் இன்றி வெற்றிகரமாக பட்ஜெட்டைத் தாக்கல் செய்ய வேண்டும் என்பதை முன்னிறுத்தி, திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வேளாண் பட்ஜெட் நகலை வைத்து ஆசி பெற்றார் வேளாண் துறை அமைச்சர் வினோத். விஐபி பிரேக் தரிசனத்தில் அமைச்சர் ஏழுமலையானை வழிபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. திருப்பதியில் சாமி தரிசனம் செய்த அமைச்சரின் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

தவெக அரசின் முதல் பட்ஜெட்டில் பெண்களுக்கான திட்டங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக மகளிர் உரிமைத் தெகையை ரூ.2,500 ஆக உயர்த்துதல் மற்றும் அனைத்து வகையான பேருந்துகளிலும் பெண்களுக்கு இலவச பயணம் ஆகிய திட்டங்களுக்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

திருப்பதி கோயிலில் வேளாண் பட்ஜெட் நகலை வைத்து ஆசி பெற்ற அமைச்சர் வினோத்விஐபி பிரேக் தரிசனத்தில் ஏழுமலையானை வழிபட்டார்#MinisterVinoth #Tirupathi #VIP #News18Tamilnadu | https://t.co/3v5L32pLWJ pic.twitter.com/IqdmOgW3sX

வேளாண் பட்ஜெட்டைப் பொறுத்தவரை, விவசாயிகளுக்கு வழங்கப்படும் கடன் குறித்த திட்டங்களில் மாறுதல்களை கொண்டு வரலாம் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் மானியக் கடன், கூட்டுறவுக் கடன் தள்ளுபடி, உர மானியம், நெல் கொள்முதல், குறைந்தபட்ச ஆதார விலை உயர்வு உள்ளிட்டவைக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.