திருப்பதியில் பக்திப் பரவசத்துடன் முடி காணிக்கை செலுத்திய ஹர்திக் பாண்டியா.. காதலியுடன் சென்றார்
திருப்பதியில் பக்திப் பரவசத்துடன் முடி காணிக்கை செலுத்திய ஹர்திக் பாண்டியா.. காதலியுடன் சென்றார்
திருப்பதி: இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா, ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்தார். அப்போது அவர் தனது தலைமுடியைக் காணிக்கையாகச் செலுத்தி பக்தி பரவசத்துடன் வழிபாடு நடத்தியுள்ளார்.
சமீபகாலமாக பல்வேறு சர்ச்சைகளிலும், அடிக்கடி ஏற்படும் காயத்தாலும் தவித்து வரும் ஹர்திக் பாண்டியா, தற்போது தீவிரப் பயிற்சியில் ஈடுபட்டு காயத்திலிருந்து மீண்டு வரும் முயற்சியில் உள்ளார். நீண்ட காலமாக காயத்தால் இந்திய அணியில் விளையாட முடியாத நிலையில் இருக்கிறார்.
அத்துடன், ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து விலகி அடுத்ததாக 2027 ஐபிஎல் தொடரில் எந்த அணிக்குச் செல்வது என்ற குழப்பமும், இந்திய அணியில் அவரது எதிர்காலம் மற்றும் வாய்ப்புகள் குறித்தான விமர்சனங்களும் தொடர்ந்து எழுந்து வருகின்றன.
இந்த நெருக்கடியான சூழ்நிலைகளுக்கு மத்தியில், ஹர்திக் பாண்டியா இன்று காலை திருப்பதிக்கு ஆன்மீகப் பயணம் மேற்கொண்டார். திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்வதற்கு முன்னதாக, அவர் முழுமையாக மொட்டை அடித்து முடி காணிக்கை செலுத்தி நேர்த்திக்கடனை நிறைவேற்றினார்.
இந்த ஆன்மீக வழிபாட்டின் போது, ஹர்திக் பாண்டியாவின் காதலி மஹிகா சர்மாவும் அவருடன் உடனிருந்தார். பாரம்பரிய உடையில் வந்திருந்த இருவரும், ஏழுமலையான் சன்னதியில் நீண்ட நேரம் பக்தி பரவசத்துடன் சாமி தரிசனம் செய்தனர். அவர்களுக்குக் கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டு பிரசாதங்கள் வழங்கப்பட்டன.
ஹர்திக் பாண்டியா மொட்டை அடித்த கோலத்தில் இருக்கும் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பரவி வருகின்றன. ஐபிஎல் ஏலத்திற்கு முந்தைய அணி மாற்ற பேச்சுவார்த்தைகள் மற்றும் இந்திய அணியில் மீண்டும் வாய்ப்பு என சிக்கல்களுக்கு மத்தியில் மன அமைதிக்காகவும், புதிய தொடக்கத்திற்காகவும் அவர் இந்த ஆன்மீகப் பயணத்தை மேற்கொண்டுள்ளதாக அவரது நட்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த மாதம் ஹர்திக் பாண்டியா மும்பையில் இருந்து குடி பெயர்ந்து பெங்களூருக்கு வந்தார். பிசிசிஐ-யின் திறன் வளர்ச்சி மையம் எனும் பயிற்சி மையம் பெங்களூருவில் தான் உள்ளது. அடிக்கடி காயம் ஏற்படுவதால்இனி பிசிசிஐ மையத்திலேயே மருத்துவர்கள் மற்றும் நிபுணர்கள் கண்காணிப்பில் பயிற்சி செய்ய முடிவு செய்த ஹர்திக் பாண்டியா பெங்களூருவுக்கு குடி பெயர்ந்தார்.