📅 Sunday, 09 August 2026 IST | ஆடி 24, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Latest News August 08, 2026 04:33 AM

திருத்தணி முருகன் கோயிலில் பக்தர்கள் விடிய விடிய தரிசனம்

திருத்தணி முருகன் கோயிலில் பக்தர்கள் விடிய விடிய தரிசனம்

திருத்தணி முருகன் கோயிலில் பக்தர்கள் விடிய விடிய தரிசனம்

திருத்தணி: திருவள்ளூர் மாவட்டத்தில் சிறப்புபெற்ற திருத்தணி முருகன் கோயில் ஆடிக்கிருத்திகை தெப்பத்திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. விழாவில் 3ம் நாளான நேற்று புகழ்பெற்ற ஆடிக்கிருத்திகை விழா கொண்டாடப்பட்டது. விழாவில், தமிழகம் மட்டுமின்றி பிறமாநிலங்களில் இருந்து 5 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் திருத்தணியில் குவிந்தனர். பக்தர்களில் பலர் மொட்டையடித்தும், காவடிகள் எடுத்தும், உடல் முழுவதும் அலகு குத்தியும் வேண்டுதலை நிறைவேற்றும் வகையில் மலைக்கோயிலுக்கு சென்றனர். நேற்று காலை முதல் விடிய விடிய பக்தர்கள் 3 லட்சம் காவடிகள் செலுத்தி சாமி தரிசனம் செய்தனர். இன்று காலையும் மலைக்கோயிலில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்தது.

வெளிமாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வாகனங்களில் வந்து மலைக்கோயிலில் காத்திருந்து காவடிகள் செலுத்தி சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இன்று மாலை சரவண பொய்கை திருக்குளத்தில் 2ம் நாள் தெப்பத் திருவிழா நடைபெற உள்ளது.