📅 Monday, 17 August 2026 IST | ஆவணி 1, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Latest News July 25, 2026 02:30 AM

திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் கேரள பல்கலைக்கழகக் கல்லூரி தமிழ்த்துறையில் பேராசிரியர் பணியிடங்களை 9லிருந்து 6ஆக குறைக்கும் வரைவுத்

திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் கேரள பல்கலைக்கழகக் கல்லூரி தமிழ்த்துறையில் பேராசிரியர் பணியிடங்களை 9லிருந்து 6ஆக குறைக்கும் வரைவுத்

திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் கேரள பல்கலைக்கழகக் கல்லூரி தமிழ்த்துறையில் பேராசிரியர் பணியிடங்களை 9லிருந்து 6ஆக குறைக்கும் வரைவுத் திட்டம் நிறுத்தப்பட்டுள்ளது. கேரள உயர்கல்வித் துறை இயக்குநர் கடந்த 9ம் தேதி வெளியிட்ட பொது இடமாற்ற வரைவு ஆணையில், பல்கலைக்கழகக் கல்லூரி தமிழ்த்துறையில் 3 பேராசிரியர் பணியிடங்கள் குறைக்கப்பட்டிருந்தன. இதையடுத்து, அந்தப் பணியிடங்களை குறைக்கக் கூடாது என்று வலியுறுத்தி திருவனந்தபுரம் தமிழ்ச்சங்கம் சார்பில் கேரள முதல்வரிடம் மனு அளிக்கப்பட்டது.

தமிழ்ச்சங்கத்தின் நிர்வாகிகள் கேரள முதல்வர் வி.டி. சதீசன், உயர்கல்வித்துறை அமைச்சர் ரோஜி எம். ஜான் மற்றும் தலைமைச் செயலாளர் பிஸ்வநாத் சின்ஹா ஆகியோரை நேரில் சந்தித்து பேராசிரியர் பணியிடங்களை குறைக்க வேண்டாம் என்று வலியுறுத்தினர். இதையடுத்து, தமிழ் பேராசிரியர் பணியிடங்கள் குறைக்கப்படாது என்று முதல்வர் உறுதியளித்துள்ளதாக திருவனந்தபுரம் தமிழ்ச்சங்க பொதுச் செயலாளர் வீராணம் சு. முருகன் தெரிவித்துள்ளார்.