📅 Wednesday, 29 July 2026 IST | ஆடி 13, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema July 29, 2026 10:33 PM

தியேட்டரில் வசூல் மழை.. ஓடிடியில் களமிறங்கும் கட்டா குஸ்தி 2.. எந்த தளத்தில் எப்போது தெரியுமா?

தியேட்டரில் வசூல் மழை.. ஓடிடியில் களமிறங்கும் கட்டா குஸ்தி 2.. எந்த தளத்தில் எப்போது தெரியுமா?

சென்னை : தியேட்டரில் வெளியாகி உலகளவில் ரூ55 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து பிளாக்பஸ்டர் அடித்த விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லட்சுமி நடித்த 'கட்டா குஸ்தி 2' திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

கட்டா குஸ்தி 2: செல்ல அய்யாவு இயக்கத்தில் விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லட்சுமி கருணாஸ், முனிஷ்காந்த், காளிவெங்கட் ஆகியோர் இணைந்து நடித்து திரைப்படம் கட்டா குஸ்தி. முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து இரண்டாம் பாகம் திரையரங்குகளில் ஜூலை 3ந் தேதி வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது. இந்த திரைப்படம் 3 வாரங்களில் உலகளவில் ₹55 கோடிக்கு மேல் வசூலித்து விஷ்ணு விஷாலின் கரியரிலேயே மிகப்பெரிய பாக்ஸ் ஆபீஸ் சாதனையைப் படைத்துள்ளது.

ஓடிடி ரிலீஸ்: கட்டா குஸ்தி 2 படத்தை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வெகுவாக பாராட்டினார். அதே தியேட்டரில் படம் பார்த்த ஒவ்வொருவரும் முதல் பாகத்தை விட இரண்டாம் பாகம் சூப்பர் என பாராட்டினார்கள். அனைவரின் பாராட்டையும் பெற்ற இத்திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸுக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த நிலையில், வரும் ஜூலை 31-ஆம் தேதி நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி என 5 மொழிகளில் படம் ஸ்ட்ரீமிங் ஆகும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.

குஸ்தி ஆட்டம்: மனைவி ஐஸ்வர்யா லட்சுமியின் குஸ்தி கனவுக்காகத் தன்னை மாற்றிக் கொண்டு, வீட்டிலேயே இருந்து குழந்தையைப் பார்த்துக் கொள்ளும் 'ஹவுஸ் ஹஸ்பண்ட்' ஆக விஷ்ணு விஷால் இருக்கிறார். உள்ளூர் போட்டிகளில் கலக்கி நேஷனல் லெவல் போட்டிக்கு ஐஸ்வர்யா போகும் போது, கோச்சால் வரும் ஈகோவால் குடும்பத்தில் விரிசல் ஏற்பட்டு அது விவாகரத்து வரை செல்கிறது. அதன் பின் என்ன ஆனது என்தை நகைச்சுவையும் குடும்ப உணர்ச்சிகளும் கலந்த படமாக இயக்குநர் கொடுத்துள்ளார்.

ஓடிடி ரசிகர்களுக்கு விருந்து: ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, காளி வெங்கட், கருணாஸ், முனீஷ்காந்த் என பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ள இத்திரைப்படம், தியேட்டர்களில் குடும்பங்களை திரையரங்கிற்கு இழுத்ததைப் போல ஓடிடியிலும் மிகப்பெரிய சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தியேட்டரில் இந்த படத்தை தவறவிட்டவர்களுக்கு இந்த படம் நிச்சய விருந்தாக இருக்கும்.