📅 Sunday, 27 September 2026 IST | புரட்டாசி 11, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics September 27, 2026 02:03 PM

தகவல் அறியும் உரிமைச் சட்டம்: தமிழக அரசின் புதிய மாற்றம்

தகவல் அறியும் உரிமைச் சட்டம்: தமிழக அரசின் புதிய மாற்றம்

தமிழ்நாட்டில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் புதிய மாற்றங்களைத் தமிழக அரசு தற்போது அதிகாரபூர்வமாகக் கொண்டுவந்துள்ளது.

மாநிலத்தில் குற்றச் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாகவும் சட்டம், ஒழுங்கு சீர்கெட்டுள்ளதாகவும் எதிர்க்கட்சிகள் அரசைக் கடுமையாகச் சாடிவரும் சூழலில் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005ன்கீழ், தமிழக அரசின் உளவு மற்றும் பாதுகாப்பு அமைப்பான ‘பொதுத் துறை’ குறித்த கேள்விகளுக்குப் பதிலளிக்கப்பட மாட்டாது.

அரசின் புதிய அறிவிப்பின்படி, சாதி மற்றும் சமூக மோதல்கள், காவல்துறைத் துப்பாக்கிச்சூடு தொடர்பான விசாரணை அறிக்கைகள் இனி வழங்கப்படமாட்டா. காவல்துறைச் சித்திரவதை, காவலில் நடக்கும் கைதிகளின் மரணங்கள் குறித்த விசாரணை அறிக்கைகளை ஆய்வு செய்யவும் இனி அனுமதி மறுக்கப்படுகிறது.

மாணவர்கள், விவசாயத் தொழிலாளர்கள், அரசியல் கட்சிகள் நடத்தும் போராட்டங்கள் தொடர்பான விவரங்களையும் இனி தகவல் அறியும் உரிமையின்கீழ் பெற முடியாது. அரசியல் காரணங்கள் மற்றும் சமூக மோதல்கள் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளைத் திரும்பப் பெறுவதற்கான கோரிக்கைகளைக் கையாளுதலும் இதன்கீழ் அடங்கும்.

அவதூறான கட்டுரைகள் மற்றும் உரைகளுக்காக வழக்கு தொடர அனுமதி அளிப்பது தொடர்பான விவகாரங்களைக் கையாளுதல் போன்றவற்றுக்கும் இனி முழுமையாக விலக்கு அளிக்கப்படுகிறது.