தமிமுன் அன்சாரி சட்டப்பேரவைக்கு BAN NEET வாசகம் பொறித்த கருப்பு சட்டையில் வருகை
தமிமுன் அன்சாரி சட்டப்பேரவைக்கு BAN NEET வாசகம் பொறித்த கருப்பு சட்டையில் வருகை
சென்னை: நீட் தேர்வு காரணமாக தன்னுடைய உயிரை நீத்த மாணவி அனிதா மறைந்து 9 ஆண்டுகள் ஆகியுள்ளது. அவரின் நினைவு நாளான இன்று மனிதநேய ஜனநாயக கட்சியின் சிதம்பரம் தொகுதி எம்எல்ஏ தமிமுன் அன்சாரி சட்டமன்றத்துக்கு Ban Neet வாசகம் பொறித்த கருப்பு சட்டையுடன் வருகை தந்துள்ளார்.
இன்றைய தினம் சட்டமன்றத்தில் மானிய கோரிக்கை மீதான விவாதத்திற்காக சட்டமன்ற உறுப்பினர்கள் வருகை தந்தனர். இந்நிலையில் சிதம்பரம் தொகுதி மனிதநேய ஜனநாயக கட்சி எம்எல்ஏ தமிமுன் அன்சாரி சட்டமன்றத்துக்கு Ban Neet வாசகம் பொறித்த கருப்பு சட்டை அணிந்து வருகை தந்துள்ளார். மாணவி அனிதாவின் 9 ஆம் ஆண்டு நினைவு நாளை ஒட்டி Ban Neet வாசகம் இடம்பெற்ற கருப்பு சட்டையுடன் அவர் பேரவைக்கு வருகை தந்துள்ளார்.
இது சம்பந்தமாக செய்தியாளர்களிடம் பேசிய போது அவர் கூறியிருப்பதாவது; நீட் எதிர்ப்பினை முன்னிறுத்தி தங்கை அனிதா தற்கொலை செய்து இன்றுடன் 9 ஆண்டுகள் நிறைவடைகிறது. அன்பு தங்கை நீட் நுழைவுத்தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து தற்கொலை செய்து, இதுவரை தமிழ்நாட்டில் அதிகாரப்பூர்வமாக 31 மாணவர்கள் நீட் தேர்வால் தற்கொலை செய்துள்ளார்கள். இது இனியும் தொடரக்கூடாது என்பதற்காக தான் தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஒருமனதாக நீட் தேர்வுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.
ஆனால் ஒன்றிய அரசு தொடர்ந்து மௌனம் காத்து வருகிறது. அனிதா போன்றவர்களின் தியாகம் வீணாகி விடக்கூடாது என்பதற்காக இன்றைய தினம் சட்டமன்றத்திற்கு இந்த பதாகை ஏந்தி Ban Neet வாசகம் பொறித்த பொறித்த கருப்பு சட்டை அணிந்து பதாகையுடன் வருகை தந்துள்ளேன் என்றார். அந்த பதாகையில் மாணவி அனிதாவின் புகைப்படமும் செப்டம்பர் 1 நீட் எதிர்ப்பு நாள். அனிதா போன்றோரின் தியாகங்கள் தோற்காது மற்றும் Ban Neet உள்ளிட்ட வாசகங்கள் இடம்பெற்றுள்ளன.
தொடர்ந்து அவர் பேசுகையில், தமிழ்நாடு சட்டப்பேரவையில் கொண்டு வந்த தீர்மானத்தை கவனத்தில் கொண்டு ஒன்றிய அரசு இந்தியா முழுவதும் நீட் தேர்வினை தடை செய்ய வேண்டும். இந்த கோரிக்கையை வலியுறுத்தி பெரியார் திடலில் இன்றைய தினம் மாலை தமிழ்நாடு மாணவர்கள் கூட்டமைப்பு சார்பாக நிகழ்வு நடைபெறவுள்ளது. இதற்கு அனைத்து கட்சிகளும் வருகை தரவுள்ளனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அனிதா அவர்களின் நினைவு நாளை மையப்படுத்தி இன்றைய தினம் பெசன்ட் நகர் கடற்கரையில் ஒன்று குரலளிக்க தமிழ்நாடு மாணவர் இளைஞர் அணி கூட்டமைப்பின் சார்பில் அனுமதி கேட்டகப்பட்ட நிலையில் அனுமதி மறுக்கப்பட்டிருகிறது. நேற்றைய தினம் சட்டசபை முடிந்த பிறகு பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதாவ் அர்ஜுனா அவர்களிடம் இது ஒரு பொதுவான விவகாரம் தாங்கள் கமிஷனரிடம் பேசுங்கள் என்று கூறியிருந்தேன் ஆனால் அனுமதி கிடைக்கவில்லை. அதனால் பெரியார் திடலில் இன்று அதற்க்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கிறது என்று அவர் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.