📅 Sunday, 04 October 2026 IST | புரட்டாசி 18, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema June 10, 2026 07:00 PM

"தமிழ் சினிமா தனது மிகச்சிறந்த கதைசொல்லிகளில் ஒருவரை இழந்துவிட்டது!"

"தமிழ் சினிமா தனது மிகச்சிறந்த கதைசொல்லிகளில் ஒருவரை இழந்துவிட்டது!"

"தமிழ் சினிமா தனது மிகச்சிறந்த கதைசொல்லிகளில் ஒருவரை இழந்துவிட்டது!" - விஷால் | Bharathiraja

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான பாரதிராஜா (84), கடந்த சில மாதங்களாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்த நிலையில், இன்று அதிகாலை காலமானார். அவருடைய மறைவுக்கு பிரபலங்களும், அரசியல் பிரமுகர்களும் அஞ்சலி செலித்தி வருகின்றனர். இந்நிலையில் தனது இரங்கலை பதிவிட்டுள்ள விஷால், "புகழ்பெற்ற திரைப்பட இயக்குநரும், 'இயக்குநர் இமயம்' என்று போற்றப்படுபவருமான பாரதிராஜா இன்று காலை நம்மை விட்டுப் பிரிந்தார் என்ற செய்தியைக் கேட்பது மிகுந்த அதிர்ச்சியையும் சோகத்தையும் அளிக்கிறது. தமிழ் சினிமாவின் போக்கையே மாற்றியமைத்த தொலைநோக்குச் சிந்தனையாளர் அவர். நம் கிராமங்கள், மக்கள் மற்றும் உணர்வுகளின் ஆன்மாவை வேறு யாரும் செய்ய முடியாத வகையில் வெள்ளித்திரையில் கொண்டு வந்தவர்; அதிலும் குறிப்பாக, பல தசாப்தங்கள் கடந்தும் ரசிகர்களின் மனதில் நீங்காத இடம்பிடிக்கும் வகையிலான கதாபாத்திரங்களையும், தனித்துவமான கதைமாந்தர் படைப்புகளையும் அவர் உருவாக்கினார்.

Shocking and sad to hear the news about our legendary filmmaker, Iyakunarimayam Bharathiraja sir passing away and leaving us all this morning. A visionary who changed the landscape of Tamil cinema forever, he brought the soul of our villages, our people and our emotions to the…

அவரது திரைப்படங்கள் பல தலைமுறை இயக்குநர்கள், நடிகர்கள் மற்றும் சினிமா ரசிகர்களுக்கு உத்வேகம் அளித்தன; அவர் உருவாக்கிய ஒவ்வொரு காட்சியமைப்பிலும் அவரது கலைத்திறன் தொடர்ந்து வாழ்ந்து கொண்டிருக்கும். படைப்பாளராகத் தடம் பதிக்க விரும்பும் எவருக்கும் அவரது படைப்புகள் ஒரு சான்றாகவும், திரைப்படக் கலைக்கான ஒரு வழிகாட்டியாகவும் திகழும். ஒரு அற்புதமான திரையனுபவத்தைத் தந்த அந்த சகாப்தம் அவரது மறைவுடன் முடிவுக்கு வருகிறது.

தமிழ் சினிமா தனது மிகச்சிறந்த கதைசொல்லிகளில் ஒருவரை இழந்துவிட்டது. அன்புள்ள ஐயா, உங்களுடன் திரையில் பகிர்ந்துகொண்ட ஒவ்வொரு தருணத்தையும் நான் பொக்கிஷமாகப் போற்றுவேன். 'பாண்டிய நாடு' திரைப்படத்தில் தந்தை-மகனாக இணைந்து பணியாற்றியபோது, உங்களுடன் கழித்த நேரங்கள் எனக்குப் பல பாடங்களைக் கற்றுக்கொடுத்தன. அந்தப் பெரிய திரையுலகின் ஓர் அங்கமாக நானும் இருக்கிறேன் என்ற உணர்வை அந்தத் தருணங்கள் எனக்கு ஏற்படுத்தின. எப்போதும் ஓர் இளைஞரைப்போலத் துடிப்புடனும், உற்சாகத்துடனும், அந்த இனிய புன்னகையுடனும் நீங்கள் நடந்துகொண்ட விதம் எனக்குப் பெரும் உத்வேகமாக இருந்தது. அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் உலகம் முழுவதும் உள்ள எண்ணற்ற ரசிகர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். இக்கட்டான இத்தருணத்தில், அவரது மனைவி, மகள் ஜனனி மற்றும் குடும்பத்தினர் அனைவருக்கும் இறைவன் மனவலிமையை அளிக்கட்டும். பாரதிராஜா சார், உங்கள் ஆன்மா சாந்தியடையட்டும்.

குறிப்பு: ஓர் அறிமுக இயக்குநராக, எனது முதல் திரைப்படத்தின் டீசரை இன்று வெளியிடுவது பொருத்தமானதாக இருக்காது என்று நான் கருதுகிறேன். உங்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாகவும், அதே திரையுலகைச் சேர்ந்த ஒருவனாக இருப்பதாலும், அதை ஒத்திவைப்பதே நான் செய்யக்கூடிய குறைந்தபட்ச செயலாகும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.