தமிழ் சினிமாவைத் தேடிவந்த தேசிய விருதுகள்!
2024 - ம் ஆண்டுக்கான, 72-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. இந்த முறை 10 தேசிய விருதுகளை தமிழ் சினிமா பெற்றிருக்கிறது. சிறந்த இயக்குநருக்கான தங்கத் தாமரை விருதுக்கு ராஜ்குமார் பெரியசாமி (அமரன்), சிறந்த பின்னணி இசைக்காக ஜி.வி.பிரகாஷ் குமார் (அமரன்), சிறந்த படத்தொகுப்புக்காக ஆர்.கலைவாணன் (அமரன்), சிறந்த துணை நடிகையாக சாச்சனா நமிதாஸ் (மகாராஜா), சமூக மற்றும் சுற்றுச்சூழல் விழுமியங்களை ஊக்குவிக்கும் சிறந்த படத்துக்காக இயக்குநர் அருண் மாதேஸ்வரன் (கேப்டன் மில்லர்), சிறந்த சண்டைப் பயிற்சிக்காக அனல் அரசு (மகாராஜா) ஆகியோர் விருது பெற்றிருக்கிறார்கள்.
சிறந்த தமிழ்ப் படமாக ‘ராயன்’ தேர்வுசெய்யப்பட்டிருக்கிறது. `கேப்டன் மில்லர்’ படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதற்காக நடிகர் தனுஷுக்குச் சிறப்புப் பிரிவில் (Special Mention) சிறந்த நடிகருக்கான விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது.
`மெய்யழகன்' படத்தின் 'சிறந்த ஒலிக்கலவை'க்காக சுரேன்.ஜி-க்கும், `புளூ' குறும்படத்தின் சிறந்த ஒலி வடிவமைப்புக்காக டி.எஸ்.ஹரி ஹர சுதனுக்கும் விருதுகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. இந்த மகிழ்ச்சிகரமான வேளையில் விருதாளர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து உரையாடினோம். அவர்களின் உணர்ச்சிகரமான பகிர்தல்...