Politics
July 27, 2026 03:31 PM
தமிழக அரசே; விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணுவை விடுதலை செய்!
தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-
தவறான அணுகுமுறை
விவசாயிகளின் நலனுக்காகச் சட்டப்பூர்வமாகவும், சனநாயக வழியிலும் தொடர்ந்து போராடி வரும் விவசாய சங்கத் தலைவர் அய்யாக்கண்ணுவை, வீட்டுக்காவலில் வைத்து அவரது குரலை ஒடுக்க முயற்சிப்பது சனநாயகத்திற்கு எதிரான செயல். கருத்தை எதிர்கொள்ள முடியாத ஆட்சிகள்தான் அடக்குமுறையை ஆயுதமாக்கும்.
நடவடிக்கையை திரும்பப் பெறுக
உடனடியாக வீட்டுக்காவல் நடவடிக்கையை திரும்பப் பெற்று, விவசாயிகளின் சனநாயக உரிமைகளை மதித்து, அவர்களின் கோரிக்கைகளை மத்திய அரசிடம் தமிழக அரசு உறுதியாக முன்வைக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
Politics