Latest News
June 03, 2026 07:01 AM
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா
தமிழக சட்டசபை செயலாளராக செயல்பட்டு வந்தவர் சீனிவாசன். இவர் கடந்த 15 ஆண்டுகளாக சட்டசபை செயலாளராக பணியாற்றி வந்தார். அதாவது, தி.மு.க., அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் அப்பதவியில் தொடர்ந்த அவர், த.வெ.க. ஆட்சியிலும் நீடித்தார்.
இந்த நிலையில், சட்டசபை செயலாளர் பதவியை சீனிவாசன் திடீரென ராஜினாமா செய்துள்ளார். இது தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் வெளியாகவில்லை என்றாலும், 35 ஆண்டுகளுக்கும் மேலாக சட்டசபை அனுபவம் கொண்ட ஒருவர், ராஜினாமா செய்திருப்பது த.வெ.க. அரசுக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
சட்டசபை செயலாளர் பதவியில் இருந்து சீனிவாசன் ராஜினாமா செய்வதற்கான காரணம் எதுவும் வெளியாகவில்லை.
தொடர்புடைய செய்திகள்
Latest News