📅 Wednesday, 05 August 2026 IST | ஆடி 20, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics August 05, 2026 05:01 PM

தமிழக பட்ஜெட் 2026

தமிழக பட்ஜெட் 2026

2026-27-ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை இன்று சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது.

தமிழ்நாட்டில் சட்டப்பேரவை தேர்தல் அறிவிக்கப்பட இருந்ததால், கடந்த பிப்ரவரி மாதம் திமுக அரசு 2026-27 நிதியாண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தது. அதன்படி, தமிழ்நாடு அரசுக்கான மொத்த வருவாய் 3 லட்சத்து 44 ஆயிரத்து 575 கோடி ரூபாயாக இருக்கும் என மதிப்பிடப்பட்டது. வருவாய்க்கான செலவு 3 லட்சத்து 93 ஆயிரத்து 272 கோடி ரூபாயாக இருக்கும் என்பதால், வருவாய்ப் பற்றாக்குறை 48 ஆயிரத்து 696 கோடி ரூபாயாக இருக்கும் என இடைக்கால நிதிநிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

இந்நிலையில், தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, விஜய் தலைமையிலான தவெக அரசு அமைந்தது. பதவியேற்பு விழாவின் போதே, அனைத்து துறைகளின் நிதிநிலை, கடன் சுமை குறித்து ஆய்வு செய்து வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என முதலமைச்சர் விஜய் அறிவித்தார். அதற்கு ஏற்ப, கடந்த ஜூன் மாதம் தமிழ்நாட்டின் நிதிநிலை குறித்து நிதியமைச்சர் மரிய வில்சன் வெள்ளை அறிக்கையை வெளியிட்டார்.

அதன்படி, 2025-26 நிதியாண்டிற்கான வருவாய் பற்றாக்குறை 78 ஆயிரத்து 324 கோடி ரூபாயாக உயர்ந்ததாக கூறப்பட்டது. மேலும், அரசின் சொந்த வரி வருவாய் 5 புள்ளி 45 சதவீதம் சரிந்ததுடன், வருவாயின் ஒவ்வொரு ரூபாயிலும் 22 புள்ளி 8 சதவீதம் வட்டி கட்டுவதற்கே செல்வதாகவும் குறிப்பிட்டிருந்தது. வட்டி, ஊதியம் மற்றும் ஓய்வூதியத்திற்கு மட்டுமே 64 சதவிகித நிதி செலவிடப்படுவதால், புதிய திட்டங்களுக்கு வெறும் 13 விழுக்காடு நிதி மட்டுமே ஒதுக்கப்படுவதாக கூறப்பட்டிருந்தது.

தமிழ்நாடு அரசுக்கு 100 ரூபாய் வரவு எனில் 145 ரூபாய் செலவாவதாகவும் வெள்ளை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. அனைத்திற்கு மேலாக, நலத்திட்டங்களுக்கு மட்டுமே ஆண்டுக்கு 25 கோடி ரூபாய் செலவிடப்படுவதாக குறிப்பிடப்பட்டிருந்தது. அது மட்டுமின்றி, தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த கடன் 13 லட்சத்து 18 ஆயிரம் கோடி ரூபாய் என வெள்ளை அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில் இன்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டின் அடிப்படையில், திமுக (2025-26) மற்றும் தவெக (2026-27) பட்ஜெட்டுகள் துறைவாரியாக ஒப்பீடு செய்யப்பட்டுள்ளன.

2026-27 பட்ஜெட்டின் மதிப்பு ரூ.2,26,740 கோடி

திமுக Vs தவெக பட்ஜெட் ஒப்பீடு

தொழிலாளர் நலம் மற்றும் திறன் மேம்பாட்டு துறை :

திமுக - ரூ.1850 கோடி ஒதுக்கீடு

தவெக - ரூ.2022 கோடி ஒதுக்கீடு

வித்தியாசம் - ரூ.172 கோடி

சமூகநீதி மற்றும் பழங்குடியினர் நலத்துறை :

திமுக - ரூ. 3,924 கோடி ஒதுக்கீடு

தவெக - ரூ.3,937 கோடி ஒதுக்கீடு

வித்தியாசம் - ரூ. 13 கோடி

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை :

திமுக - ரூ.1,216 கோடி ஒதுக்கீடு

தவெக - ரூ. 1485 கோடி ஒதுக்கீடு

வித்தியாசம் - ரூ. 269 கோடி

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை :

திமுக - ரூ.21,906 கோடி ஒதுக்கீடு

தவெக - ரூ.23,357 கோடி ஒதுக்கீடு

வித்தியாசம் - ரூ.1,451 கோடி

போக்குவரத்து துறை :

திமுக - ரூ. 12,965 கோடி ஒதுக்கீடு

வித்தியாசம் - ரூ.596 கோடி

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை :

திமுக - ரூ.29,465

வித்தியாசம் - 10,144 கோடி

நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை :

திமுக - ரூ. 20,043 கோடி ஒதுக்கீடு

தவெக - ரூ. 21,524 கோடி ஒதுக்கீடு

வித்தியாசம் - ரூ.1,481 கோடி

பள்ளிக்கல்வித்துறை :

திமுக - ரூ. 46,767 கோடி ஒதுக்கீடு

தவெக - ரூ. 44,527 கோடி ஒதுக்கீடு

வித்தியாசம் - 2,240

உயர்கல்வித்துறை :

திமுக - ரூ.8,494 கோடி ஒதுக்கீடு

தவெக - ரூ.8,393 கோடி ஒதுக்கீடு

வித்தியாசம் -101

திமுக - ரூ. 9,460 கோடி ஒதுக்கீடு

தவெக - ரூ.9,264 கோடி ஒதுக்கீடு

வித்தியாசம் - 196

சமூகநலம் மற்றும் மகளிர் உரிமை :

திமுக - ரூ.8,597 கோடி ஒதுக்கீடு

தவெக - ரூ.9,818 கோடி ஒதுக்கீடு

வித்தியாசம் - 1,221

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு :

திமுக - ரூ.572.02 கோடி ஒதுக்கீடு

தவெக - ரூ.1,051 கோடி ஒதுக்கீடு

வித்தியாசம் - 478.98

எரிசக்தித்துறை :

திமுக - ரூ.21,178 கோடி ஒதுக்கீடு

தவெக - ரூ.15,828 கோடி ஒதுக்கீடு

வித்தியாசம் - 5,350