📅 Sunday, 16 August 2026 IST | ஆடி 31, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics July 26, 2026 03:30 PM

"தமிழகத்தை மறைமுகமாக பாஜகதான் ஆள்கிறது.."

"தமிழகத்தை மறைமுகமாக பாஜகதான் ஆள்கிறது.."

"தமிழகத்தை மறைமுகமாக பாஜகதான் ஆள்கிறது.." - ஆளுநர் ஷா நவாஸ் சர்ச்சை கருத்து!!

தமிழக வெற்றி கழகம் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இடையேயான கூட்டணி குறித்து சமீப நாட்களாக பல்வேறு அரசியல் விவாதங்களும் குழப்பங்களும் எழுந்துள்ளன. 2026-ம் ஆண்டுத் தேர்தலுக்குப் பிறகு தமிழகத்தில் ஏற்பட்டுள்ள புதிய அரசியல் சூழலில், சி.ஜோசப் விஜய் தலைமையிலான தவெக அரசுக்கு விசிக தனது நிபந்தனையற்ற ஆதரவை வழங்கியுள்ளது.

தவெக அரசுக்கு வெளியிலிருந்து ஆதரவு என்ற நிலைப்பாட்டை இடதுசாரிகள் எடுத்திருந்தாலும், விசிக சார்பில் அமைச்சரவையில் பிரதிநிதிகள் இடம்பெற்றுள்ளனர். தவெக ஆட்சி 5 ஆண்டுகளுக்கு எவ்வித இடையூறும் இல்லாமல் தொடர விசிக துணை நிற்கும் என அக்கட்சி அறிவித்தது. ஒருபுறம் "தவெக ஆட்சி அமைந்தால் அதை ஐந்து ஆண்டுகள் முழுமையாக நீடிக்கச் செய்வோம்; கவிழ்க்க மாட்டோம்" என்று திருமாவளவன் கூறினாலும், மறுபுறம் "தவெக-விசிக இன்னும் அதிகாரப்பூர்வ கூட்டணியை உருவாக்கிக் கொள்ளவில்லை" என்றும் கூறி வருகிறார்.

இந்த முன்னுக்குப் பின் முரணான கருத்துகள் தவெக மற்றும் திமுக ஆகிய இரு தரப்பிற்குமே ஒரு தர்மசங்கடமான சூழலையும் குழப்பத்தையும் உருவாக்கியுள்ளது.

இப்படியான நிலையில் தான், புதியதலைமுறைக்கு பேட்டியளித்த ஆளூர் ஷா நவாஸ், பாஜகவின் கைப்பாவையான தேர்தல் ஆணையம் நியமித்த தலைமை செயலாளரை மாற்றாதது ஏன்? என கேள்வி எழுப்பி சாய் குமாரின் பணி காலத்தை நீடித்தது சந்தேகத்தை எழுப்புவதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் பேசிய அவர், "எல்லோரையும் மாற்றிய இந்த அரசு.. ஏன் சாய் குமாரை மாற்றவில்லை? தமிழகத்தை மறைமுகமாக பாஜகதான் ஆள்கிறது" என்று விமர்சித்திருக்கிறார்.

அதோடு, தமிழ்நாட்டில் INDIA கூட்டணி இல்லை என்றும் கூட்டணி அமைக்க முடியாமல் காங்கிரஸ் திணறுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இடைத்தேர்தல் வரும் காரணத்தால் திமுக கூட்டணியில் நீடிப்பதா அல்லது தவெகவோடு புதிய கூட்டணியை அமைப்பதா என்ற இருமுனை அரசியல் நகர்வுகளே விசிக மற்றும் தவெக விவகாரத்தில் தற்போதைய குழப்பத்திற்குக் காரணமாக அமைந்துள்ளது.