📅 Monday, 17 August 2026 IST | ஆவணி 1, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Latest News July 18, 2026 10:31 AM

தமிழகத்தில் இடி, மின்னலுடன் மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்!

தமிழகத்தில் இடி, மின்னலுடன் மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்!

தமிழகத்தில் இடி, மின்னலுடன் மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்!

தமிழகத்தில் இன்று இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வடக்கு கடலோர தமிழகத்தில் ஒரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவித்துள்ளது.

தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள் முதல் வடக்கு லட்சத்தீவு பகுதிகள் வரை மற்றும் வட தமிழகம்,தெற்கு உள் கர்நாடகா , வடக்கு கேரளா, வழியாக சுமார் 7.6 கி.மீ உயரத்தில் காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது.

இதன் காரணமாக இன்று மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வடக்கு கடலோர தமிழகத்தில் ஒரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மணிக்கு (30 முதல் 40 வரை கிலோ மீட்டர்) வேகத்தில் கூடிய மிதமான மழை பெய்யக் கூடும். அதனைத் தொடர்ந்து ஏனைய தமிழகத்தில் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.

மேலும் 19 ஆம் தேதி முதல் 23 ஆம் தேதி வரையிலும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் ( மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வரை வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.ஏனைய தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடி லேசான மழை பெய்யக்கூடும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

18 ஆம் தேதி முதல் 21 ஆம் தேதி வரை தமிழகம்,புதுவை, மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு. மேலும் உள் தமிழகத்தில் அதிக பட்ச வெப்பநிலை ஒரு சில இடங்களில் 2-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாகவும் இருக்கக் கூடும்.

இன்றைய வெப்பநிலை ஒரு சில பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை 37-38° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28-29° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.