📅 Wednesday, 26 August 2026 IST | ஆவணி 10, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Health August 26, 2026 04:03 PM

தமிழ்நாட்டில் வேகமாக பரவும் பன்றிக்காய்ச்சல்

தமிழ்நாட்டில் வேகமாக பரவும் பன்றிக்காய்ச்சல்

இன்புளுவென்சா என்ற வைரசால் ஏற்பட்டுள்ள சுவாச தொற்று நோய் பன்றிக்காய்ச்சல் ஆகும். முதலில் பன்றிகளில் இருந்து பரவிய இந்த பன்றிக்காய்ச்சல் மனிதர்களிடமிருந்து மனிதர்களுக்கு பரவுகிறது.

பன்றிக்காய்ச்சல் தற்போது இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது. ராஜஸ்தான், டெல்லி உள்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் பன்றிக்காய்ச்சல் பரவி வருகிறது.

தமிழ்நாட்டில் பன்றிக்காய்ச்சல் பரவல்

இந்நிலையில், தமிழ்நாட்டிலும் பன்றிக்காய்ச்சல் வேகமாக பரவி வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அதன்படி, ஜனவரி மாதம் தமிழகத்தில் 19 பேருக்கு பன்றிக்காய்ச்சல் பாதிப்பு இருந்த நிலையில் தற்போது அந்த எண்ணிக்கை 339 ஆக அதிகரித்துள்ளது. அதேவேளை, பன்றிக்காய்ச்சல் அறிகுறிகளான திடீர் உயர் காய்ச்சல், இருமல்,

தொண்டை வலி, உடல் வலி , தசை வலி , மூட்டு வலி, தலைவலி, கடுமையான சோர்வு , குளிர் நடுக்கம், மூச்சுத் திணறல், சுவாசிப்பதில் சிரமம் , நெஞ்சு வலி போன்ற உடல்நலக்குறைவு ஏற்பட்டால் பொதுமக்கள் உடனடியாக மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்யுமாறு சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.