தமிழறிஞர், பட்டிமன்ற நடுவர்.. காலமானார் சாலமன் பாப்பையா!!
தமிழறிஞர், பட்டிமன்ற நடுவர்.. காலமானார் சாலமன் பாப்பையா!!
புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவரும், தமிழறிஞருமான சாலமன் பாப்பையா வயது மூப்பால் ஏற்பட்ட உடல்நலக் குறைவு காரணமாக இன்று உயிரிழந்திருக்கிறார். இவருக்கு வயது 90.
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகேயுள்ள சாத்தங்குடியில், கடந்த 1936-ம் ஆண்டு பிறந்த சாலமன் பாப்பையா, பேராசியர், பேச்சாளர், பட்டிமன்ற நடுவர், எழுத்தாளர், நடிகர் போன்ற பன்முகத் தன்மை கொண்டவர். தமிழறிஞர், முத்தமிழறிஞர், சொல்வேந்தர் உள்ளிட்ட பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ளார். வெள்ளித்திரையில், சிவாஜி, பாய்ஸ் உள்ளிட்டப் படங்களிலும் நடித்திருக்கிறார். திருக்குறள், கம்ப ராமாயணத்துக்கும் உரை எழுதியிருக்கிறார்.
இந்தச்சூழலில் தான், மதுரை அரசரடி பகுதியில் உள்ள ஞான ஒளிபுரத்தில் குடும்பத்துடன் சாலமன் பாப்பையா வசித்து வந்த நிலையில், உடல்நலக் குறைவால் இன்று காலமானார். இவரது மனைவி ஜெயாபாய் கடந்த ஆண்டு காலமாகியிருந்தார்.
அவரது மறைவு தமிழக மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அரசியல்கட்சித் தலைவர்கள், சினிமா நடிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.