📅 Tuesday, 15 September 2026 IST | ஆவணி 30, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Business September 15, 2026 01:33 AM

 தங்கம் விலை சவரனுக்கு ரூ.360 குறைவு

 தங்கம் விலை சவரனுக்கு ரூ.360 குறைவு

சென்னை: தமிழகத்தில் கடந்த சனிக்கிழமை, 22 காரட் ஆபரண தங்கம், கிராம் 14 ஆயிரத்து 170 ரூபாய்க் கும், சவரன் 1 லட்சத்து 13 ஆயிரத்து 360 ரூபாய்க்கும் விற்பனையானது.

வெள்ளி கிராம், 250 ரூபாய்க்கு விற்கப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை, தங்கம் சந்தைக்கு விடுமுறை. அன்று, முந்தைய நாள் விலையிலேயே ஆபரணங்கள் விற்பனையாகின.

நேற்று, தங்கம் விலை கிராமுக்கு 45 ரூபாய் குறைந்து, 14 ஆயிரத்து 125 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு 360 ரூபாய் சரிவடைந்து, 1 லட்சத்து 13 ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்பட்டது. வெள்ளி விலையில் மாற்றமில்லை.