📅 Thursday, 20 August 2026 IST | ஆவணி 4, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Business August 20, 2026 10:02 AM

 தங்கம் விலை காலையில் குறைவு மாலையில் உயர்வு

 தங்கம் விலை காலையில் குறைவு மாலையில் உயர்வு

சென்னை: தமிழகத்தில் நேற்று காலை, தங்கம் விலை சவரனுக்கு 680 ரூபாய் குறைந்த நிலையில், மாலையில் 1,560 ரூபாய் அதிகரித்தது.

தமிழகத்தில் நேற்று முன்தினம், 22 காரட் ஆபரண தங்கம் கிராம் 14,290 ரூபாய்க்கும், சவரன் 1,14,320 ரூபாய்க்கும் விற்பனையானது. வெள்ளி கிராம், 255 ரூபாய்க்கு விற்கப்பட்டது.

நேற்று காலை, தங்கம் விலை கிராமுக்கு 85 ரூபாய் குறைந்து, 14,205 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு, 680 ரூபாய் சரிவடைந்து, 1,13,640 ரூபாய்க்கு விற்கப்பட்டது. வெள்ளி கிராமுக்கு 5 ரூபாய் குறைந்து, 250 ரூபாய்க்கு விற்பனையானது.

நேற்று மாலை தங்கம் விலை கிராமுக்கு, 195 ரூபாய் உயர்ந்து, 14,400 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு, 1,560 ரூபாய் அதிகரித்து, 1,15,200 ரூபாய்க்கு விற்கப்பட்டது. இதையடுத்து, நேற்று, தங்கம் சவரனுக்கு, 880 ரூபாய் உயர்ந்தது.

வெள்ளி கிலோவுக்கு 5,000 ரூபாய் சரிவடைந்து, 2.50 லட்சம் ரூபாய்க்கு விற்கப்பட்டது.