📅 Thursday, 17 September 2026 IST | புரட்டாசி 1, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Business September 17, 2026 06:33 AM

தங்கம் விலை நிலவரம்: நேற்று குறைந்து இன்று உயர்வு! மீண்டும் ரூ.1.12 லட்சத்தைக் கடந்தது தங்கம்!

தங்கம் விலை நிலவரம்: நேற்று குறைந்து இன்று உயர்வு! மீண்டும் ரூ.1.12 லட்சத்தைக் கடந்தது தங்கம்!

தங்கம் விலை நிலவரம்: நேற்று குறைந்து இன்று உயர்வு! மீண்டும் ரூ.1.12 லட்சத்தைக் கடந்தது தங்கம்!

தங்கம் விலை தொடர்ந்து குறைந்து வந்த நிலையில் இனிவரும் நாட்களிலும் தங்கம் விலை மேலும் குறைய வாய்ப்பிருப்பதாக நிபுணர்கள் தெரிவித்திருந்தனர். குறிப்பாக, சவரன் விலை ரூ. 1 லட்சத்துக்கும் கீழே குறையும் என்று கூறியிருந்ததால், இன்னும் கொஞ்சம் விலை குறைய பிறகு நகை வாங்கலாம் என பலர் திட்டமிட்டிருந்தனர். ஆனால் அவர்களை ஏமாற்றமடைய செய்திருக்கிறது திடீர் தங்கம் விலை உயர்வு.

ஆகஸ்ட் மாதத்தின் இறுதி ஒரு வாரத்தில் மட்டும் சவரனுக்கு கிட்டத்தட்ட ரூ. 8,000 அதிகரித்து நகைப்பிரியர்களை வருத்தத்தில் ஆழ்த்தியது. எனினும், அடுத்தடுத்த நாட்களில் தங்கம் விலை ஏறுவதும் இறங்குவதுமாக இருக்கிறது. குறிப்பாக, செப்டம்பர் மாதம் தொடங்கியதிலிருந்தே ஒரு நாள் விலை கூடினால் அடுத்த நாள் குறைகிறது. ஒருசில நாட்களில் காலை, மாலை என இருவேளை விலை மாற்றம் கண்டு வருகிறது.

ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று (செப்டம்பர் 15) 1 கிராமுக்கு ரூ.85 குறைந்து ரூ.14,040-க்கும், ஒரு சவரன் ரூ.680 குறைந்து ரூ.1,12,320-க்கும் விற்பனையானது.

தங்க நகைப் பிரியர்கள் அனைவருக்கும் அதிர்ச்சி அளிக்கும் வகையில், இன்று (செப்டம்பர் 16) ஆபரணத் தங்கத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. 22 காரட் ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.25 உயர்ந்து ரூ.14,065-க்கு விற்பனையாகிறது. ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.200 உயர்ந்து, ரூ.1,12,520-க்கு விற்பனையாகிறது.

வெள்ளியின் விலை இன்று மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.250-க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.2,50,000-க்கும் விற்பனையாகிறது.