📅 Monday, 21 September 2026 IST | புரட்டாசி 5, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema August 03, 2026 09:33 PM

‘தனி ஒருவன்‘ மோகன் ராஜாவுடன் இணையும் கார்த்தி .. கார்த்தி 31 மாஸ் அறிவிப்பு!

‘தனி ஒருவன்‘ மோகன் ராஜாவுடன் இணையும் கார்த்தி .. கார்த்தி 31 மாஸ் அறிவிப்பு!

சென்னை: சர்தார் 2, மார்ஷல் என அடுத்தடுத்து படங்களில் நடித்து முடித்துள்ள நடிகர் கார்த்தி, அடுத்ததாக முன்னணி இயக்குனர் மோகன் ராஜா இயக்கத்தில் கமிட்டாகி உள்ளார். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.

பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் கார்த்தி இருவேடங்களில் நடித்த சர்தார் படம் 2022 ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றிபெற்றது. 'சர்தார்' படத்தின் வெற்றியைத்தொடர்ந்து இரண்டாம் பாகம் தற்போது விறுவிறுப்பாக உருவாகி வருகிறது. ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இத்திரைப்படம், வரும் செப்டம்பர் மாதம் 10-ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது. இப்படத்தில் மாளவிகா மோகனன், எஸ்.ஜே. சூர்யா, யோகி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

'மார்ஷல்' படப்பிடிப்பு: 'சர்தார் 2' படத்தைத் தொடர்ந்து, கார்த்தி தனது 29வது படமான 'மார்ஷல்' திரைப்படத்தில் கவனம் செலுத்தி வருகிறார். 'டாணாக்காரன்' பட இயக்குனர் தமிழ் இயக்கும் இத்திரைப்படத்திற்கு சாடய் அபயங்கர் இசையமைக்கிறார். டிரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படம் கடல் பின்னணியில் நடக்கும் கேங்ஸ்டர் கதையில் உருவாக உள்ளதாக கூறப்படுகிறது. இதில், கல்யாணி பிரியதர்ஷன் கதாநாயகியாக நடிக்க, ஆதி பினிஷெட்டி வில்லனாக நடிக்கிறார். மேலும், சத்யராஜ், பிரபு, லால் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தின் இரண்டு கட்டப் படப்பிடிப்புகள் முடிந்த நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டி உள்ளது.

மோகன் ராஜாவுடன் கூட்டணி : இதைத்தொடர்ந்து, இயக்குநர் கல்யாண் சங்கர் இயக்கத்தில் பெயரிடப்படாத ஒருபடத்தில் நடித்து வருகிறார். இதில், கார்த்திக்கு ஜோடியாக முன்னணி நடிகை மீனாட்சி சவுத்ரி கதாநாயகியாக நடிக்கிறார். இப்படத்தை சித்தாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ் நிறுவனம் பிரம்மாண்ட வரவு செலவு தயாரித்து வருகிறார். அடுத்தடுத்து படங்களை கைவசம் வைத்து இருக்கும் கார்த்தியின் 31வது படம் குறித்த அறவிப்பு வெளியாகி உள்ளது. இப்படத்தை பிரபல இயக்குனர் மோகன் ராஜா இயக்கவுள்ளார். பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் எஸ். லட்சுமணன் குமார் தயாரிக்கும் இத்திரைப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. படத்தின் பூஜை தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜெயம், எம். குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி, உனக்கும் எனக்கும், சந்தோஷ் சுப்பிரமணியம், வேலாயுதம், தனி ஒருவன் பல வெற்றிப்படங்களை கொடுத்த மோகன் ராஜாவுடன் கார்த்தி முதன்முறையாக இணைய உள்ளார். இது சினிமா ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.