📅 Saturday, 08 August 2026 IST | ஆடி 23, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics August 07, 2026 07:33 AM

தஞ்சாவூர்: உதயநிதி கைது விவகாரத்தில் போராட்டம்; திமுக கவுன்சிலர் உட்பட இருவர் கைது

தஞ்சாவூர்: உதயநிதி கைது விவகாரத்தில் போராட்டம்; திமுக கவுன்சிலர் உட்பட இருவர் கைது

தஞ்சாவூர்: உதயநிதி கைது விவகாரத்தில் போராட்டம்; திமுக கவுன்சிலர் உட்பட இருவர் கைது

உதயநிதி கைது செய்யப்பட்டதைக் கண்டித்து தஞ்சாவூரில் திமுக-வினர் போராட்டம் நடத்தினர். இதில் சில தவெக நிர்வாகிகளைத் தாக்கியதுடன் மகளிர் நிர்வாகிகளை இழிவாகப் பேசியதாகச் சொல்லப்படும் விவகாரத்தில் இரண்டு திமுக நிர்வாகிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி தலைமையில், கடந்த 3ம் தேதி, தஞ்சாவூரில், காவிரி விவகாரம் தொடர்பாக, தமிழக அரசையும், முதல்வரையும் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.

இதில் உதயநிதி பேசியது சர்ச்சையானது. அவர் இரட்டை அர்த்தத்தில் பேசியதாகக் கடும் விமர்சனம் எழுந்தது. இந்த விவகாரத்தில் உதயநிதி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதையடுத்து கடந்த 4ம் தேதி உதயநிதி கைது செய்யப்பட்டு தஞ்சாவூர், செங்கிப்பட்டி காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டார். இதைக் கண்டித்து, தஞ்சாவூரில் தி.மு.க-வினர் ரயில்வே ஸ்டேஷனில் இருந்து அண்ணாசிலை வரை பேரணியாகச் சென்றனர்.

அதே வேளையில், பெண்களை இழிவாகப் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதியைக் கண்டித்து, த.வெ.க மகளிரணி சார்பில், ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்காக, அண்ணா சிலை பகுதியில் வைக்கப்பட்டிருந்த த.வெ.க. கொடியை, தி.மு.க-வினர் பிடிங்கி எறிந்ததுடன் முதல்வர் விஜய் உருவப்பொம்மை எரித்து கோஷமிட்டனர்.

அப்போது அங்கிருந்த தி.மு.க-வினருக்கும், த.வெ.க-வினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பிறகு இரு கட்சினரும் ஒருவருக்கு ஒருவர் செருப்பு, கற்களை வீசிக்கொண்டனர். இதில் த.வெ.க நிர்வாகிகள் சிலர் காயமடைந்தனர்.

இது குறித்து த.வெ.க தஞ்சாவூர் மத்திய மாவட்ட செயற்குழு உறுப்பினரான மகாலட்சுமி, கிழக்கு போலீஸில் புகார் அளித்தார். அதில் தி.மு.க-வைச் சேர்ந்த முன்னாள் மேயர் சண்.இராமநாதன், மாநகராட்சி கவுன்சிலர்கள் நீலகண்டன், அண்ணா.பிரகாஷ், இளஞரணி துணை அமைப்பாளர் வயலுார் கார்த்தி மற்றும் நிர்வாகிகள் ராஜா, மனோகர், சதீஷ், ராஜா சீனிவாசன், உள்ளிட்டோர் கூட்டத்தில் உள்ள மகளிரைப் பார்த்து இழிவுப்படுத்தும் விதமாகப் பேசி, அசிங்கமான செய்கை செய்ததாகக் கூறப்பட்டிருந்தது.

மேலும் நீலகண்டன், கார்த்தி உள்ளிட்டோர் சிலரைத் தாக்கியதாகவும் சொல்கிறார்கள்.

இப்புகாரின் அடிப்படையில் கிழக்கு போலீஸார் முதற்கட்டமாக நீலகண்டன், வயலுார் காரத்தி இருவர் மீது ஆறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

திமுக வட்டாரத்தில் இந்தக் கைது பரபரப்பை ஏற்படுத்தியது. நீலகண்டன், இதைப் பொய் வழக்கு என்றும் இதைச் சட்டரீதியாக எதிர் கொள்வோம் எனவும் கூறினார்.