📅 Tuesday, 15 September 2026 IST | ஆவணி 30, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema August 01, 2026 02:30 PM

தந்தையைப் புகழ்ந்த ஜேசன் சஞ்சய்

தந்தையைப் புகழ்ந்த ஜேசன் சஞ்சய்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராகத் திகழ்ந்த விஜய், தற்போது தமிழக முதலமைச்சராகப் பொறுப்பு வகிக்கிறார்.

அவரின் மகனான ஜேசன் சஞ்சய் தமிழ்த் திரையுலகில் இயக்குநராக வளர்ந்துள்ளார். சந்தீப் கிஷன் நடிப்பில் ‘சிக்மா’ என்ற படத்தை அவர் இயக்கியுள்ளார். இப்படம் விரைவில் திரைக்கு வருகிறது.

இந்நிலையில், ஜேசன் சஞ்சய் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டபோது அவரிடம் சில கேள்விகள் கேட்கப்பட்டன.

இதில், “உங்கள் பெயரைக் கொண்ட ஹாலிவுட் நடிகர் ஜேசன் ஸ்டேதம், ‘சிக்மா’ படத்தை பார்த்து விட்டு தம்பி வாங்க ஹாலிவுட்டில் ஒரு படம் பண்ணலாம் என்று கூப்பிடுகிறார். அப்படி ஒரு வாய்ப்பு வந்தால் இந்தியாவிலிருந்து எந்த ஒரு சிறந்த நடிகரை கூட்டி செல்வீர்கள்?” என்று கேட்கப்பட்டது.

இதற்கு ஜேசன் சஞ்சய், “எனக்கு முதலில் நினைவுக்கு வருவது அப்பாதான் (விஜய்). இருவரும் இணைந்தால் அது அட்டகாசமான கூட்டணியாகவும் இருக்கும். நான் இப்போது தெரிவிக்கும் இந்த கருத்தை நடிகர் ஜேசன் ஸ்டேதம் பார்க்கவேண்டும் என்று நினைக்கிறேன்,” என்று பதிலளித்தார்.

மேலும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி தொடர் சென்னையில் நடந்தபோது, விஜய்யின் தோளில் சிறுவனாக அமர்ந்துகொண்டு அந்தப் போட்டியைப் பார்த்து ரசித்தது உள்ளிட்ட சில அனுபவங்களையும் ஜேசன் சஞ்சய் பகிர்ந்துகொண்டார்.

தனது தந்தை விஜய் பற்றி ஜேசன் சஞ்சய் பெருமையாக கூறியவை சமூக வலைத்தளங்களில் பரபரப்பாக பேசப்பட்டுவருகின்றன.

மனைவி சங்கீதா மணவிலக்கு கேட்டு மனு தாக்கல் செய்ததையடுத்து விஜய்க்கும் அவரின் பிள்ளைகளுக்கும் இடையே உறவு கசந்துபோனதாகச் சில தகவல்கள் வெளியாயின. அதனைத் தொடர்ந்து ஜேசன் சஞ்சய் இவ்வாறு பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது.

இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்

17 ஆண்டுகளுக்கு முன்பு விஜய் நடிப்பில் வெளியான ‘வேட்டைக்காரன்’ படத்தில் சிறு பிள்ளையாக இருந்தபோது ஜேசன் சஞ்சய் ஒரு பாடல் காட்சியில் தந்தையுடன் நடித்திருந்தார்.