தனுஷ் அம்மா கழுத்தில் தேசிய விருது.. மிருணாள் தாக்கூர் போட்ட கமெண்ட்டை பாருங்க!
சென்னை: 72வது தேசிய விருது விழாவில் நடிகர் தனுஷ் தேசிய விருது வென்ற நிலையில், சென்னை திரும்பிய அவர் தனது அம்மாவின் கழுத்தில் அந்த தேசிய விருதை அணிவித்து எடுத்த போட்டோவை சற்றுமுன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.
நடிகர் தனுஷ் இன்ஸ்டாகிராமில் அம்மாவின் போட்டோவை போட்ட அடுத்த சில நிமிடங்களிலேயே நடிகை மிருணாள் தாக்கூர் கமெண்ட் போட்டுள்ளது ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
சில மாதங்களுக்கு முன்னதாக நடிகர் தனுஷ் மற்றும் மிருணாள் தாக்கூர் இருவரும் காதலித்து வருவதாகவும், இந்த ஆண்டு பிப்ரவரி 14ம் தேதி திருமணம் நடைபெறப் போவதாகவும் வதந்திகள் பரவிய நிலையில், தனுஷ் தனது நண்பர் என்று மிருணாள் தாக்கூர் விளக்கம் அளித்து வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திருந்தார்.
எல்லாமே அந்த சிரிப்புக்குத்தானே: நடிகர் தனுஷ் மேடையேறி தேசிய விருது வாங்கும் போது எழுந்து நின்று எட்டிப் பார்த்த அவரது அம்மா விஜயலட்சுமியின் காட்சிகள் நேற்றே இணையத்தில் தீயாக பரவின. இந்நிலையில், தனது அம்மாவின் கழுத்தில் தேசிய விருதை அணிவித்து எடுத்த போட்டோவை ஷேர் செய்த தனுஷ் "All for that smile" என கேப்ஷன் கொடுத்து போஸ்ட் போட்டுள்ளார்.
மிருணாள் தாக்கூர் கமெண்ட்: நடிகர் தனுஷின் போஸ்ட்டுக்கு உடனடியாக நடிகை மிருணாள் தாக்கூர், "Precious❤️ congratulations Sir" என கமெண்ட் போட்டுள்ளார். அதற்கு கீழ் ஏகப்பட்ட ரசிகர்கள் கமெண்ட்டுகளை குவித்து வருகின்றனர். நடிகை குஷ்பு, கிகி விஜய் உள்ளிட்ட பிரபலங்களும் தனுஷின் இந்த போஸ்ட்டுக்கு கமெண்ட் போட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
A post shared by Dhanush (@dhanushkraja)
ஜோடி சேரணும்: சீதா ராமம் படம் தெலுங்கில் ஓடியதை போலவே தமிழ் ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தது. ஆனால், இன்னமும் நடிகை மிருணாள் தாக்கூர் ஒரு நேரடி தமிழ் படத்தில் கூட நடிக்கவில்லை என ரசிகர்கள் ஏங்கித் தவித்து வருகின்றனர். தனுஷ் உடன் இணைந்து ஒரு படத்தில் மிருணாள் தாக்கூர் நடித்தால் சிறப்பாக இருக்கும் என கமெண்ட்டுகள் குவிந்து வருகின்றன. முன்னதாக மகன்களுடன் தேசிய விருது வாங்கியதுமே எடுத்த போட்டோவையும் தனுஷ் ஷேர் செய்திருந்தார். அடுத்த மாதம் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ் நடித்த ஓம் படம் திரைக்கு வருகிறது.