📅 Wednesday, 29 July 2026 IST | ஆடி 13, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics July 29, 2026 09:33 PM

தனுஷ் அரசியலுக்கு வந்தால் திமுக, அதிமுக இருக்காது.. அடித்து கூறும் விஜய்யின் ஆஸ்தான ஜோதிடர்

தனுஷ் அரசியலுக்கு வந்தால் திமுக, அதிமுக இருக்காது.. அடித்து கூறும் விஜய்யின் ஆஸ்தான ஜோதிடர்

சென்னை: தனுஷ் ரசிகர் நற்பணி மன்றம் சார்பாக சில நாட்களுக்கு முன்பு ரத்த தான முகாமும், நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவும் நடைபெற்றது. அதில் தனுஷின் பேச்சுக்கள் அவர் அரசியலுக்கு வருவாரோ என்ற சந்தேகத்தையும் பலரிடம் உண்டு செய்தது. இந்நிலையில் விஜய்யின் ஆஸ்தான ஜோதிடரான ரத்தன் பண்டிட்; தனுஷின் அரசியல் பிரவேசம் குறித்து பேசியிருக்கிறார். அது கவனத்தை ஈர்த்திருக்கிறது.

தனுஷ் நேற்று தனது 43வது பிறந்தநாளை கொண்டாடினார். அதனையொட்டி போயஸ் கார்டன் இல்லத்தின் முன்பு ரசிகர்களும், ரசிகைகளும் குவிந்து அவருக்கு வாழ்த்து தெரிவித்தார்கள். தனுஷும் பால்கனியில் இருந்து கைகள் காட்டி அந்த வாழ்த்தை பெற்றுக்கொண்டார். அதற்கும் முன்னதாக; திருவள்ளூரில் தனுஷ் ரசிகர் நற்பணி மன்றம் சார்பாக ரத்த தான முகாமும், நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவும் கோலாகலமாக நடந்தன. இதில் ஏராளமான தனுஷ் ரசிகர்கள் கலந்துகொண்டாரக்ள்.

தனுஷின் பேச்சு: அந்த விழாவில் பேசிய தனுஷ், "ராயன், கேப்டன் மில்லர் படங்களுக்கு தேசிய விருது கொடுத்தார்கள். அந்தப் படங்களை விட தகுதியான படங்கள் வந்திருக்கின்றன. ஏன் கொடுக்கவில்லை என்று கேட்கிறார்கள். அவர்களை நான் மதிக்கிறேன். ஆனால், புதுப்பேட்டை, மயக்கம் என்ன, 3, வடசென்னை, கர்ணன் உள்ளிட்ட படங்களுக்கு எல்லாம் தேசிய விருது கொடுக்கவில்லை. அப்போது ஏன் கொடுக்கவில்லை என்று யாரும் கேட்கவில்லை. இப்போது ஏன் கொடுத்தீர்கள் என கேட்கிறார்கள்.

தட்டிவிடாதீர்கள்: தட்டிவிடாதீர்கள்; தட்டிக்கொடுங்கள். அஜித் சொல்வது மாதிரி,'நீயா தோத்துட்டன்னு ஒத்துக்கும் வரைக்கும் உன்னை யாரும் தோற்கடிக்க முடியாது. இசை வெளியீட்டு விழாவிலோ, இதுபோன்ற நிகழ்வுகளிலோ சந்தித்துவிட்டு கலைவது என்று மட்டும் இருக்கக்கூடாது.

அந்தக் கூட்டம் நாம் இல்லை: இந்தக் கூட்டத்துக்கு ஒரு நோக்கம் இருக்கிறது என்பதை உணர்த்த வேண்டும். நம்மிடம் இருக்கும் பசங்க சும்மா இணையத்தில் நெகட்டிவிட்டியையும், அவதூறையும் பரப்பும் கூட்டம் இல்லை. மேலே இருப்பவர்களை கீழே இறக்கிவிடுவது, டாக்சிக் பரப்புவது போன்ற செயல்களை செய்யும் பசங்க இல்லை. களத்தில் இறங்கி களைகட்டும் பசங்க. அன்பே பகிரும் பசங்க, அன்பே சிவம் என்ற பாதையில் போகும் பசங்க. ஓம் நமச்சிவாயா.. ஜெய்" என முடித்தார்.

அரசியல் பிரவேசம்?: மேலும் தன் மகன் லிங்காவுடன் வீடியோ கேம் விளையாண்ட கதையையும் சொன்னார். ஆனால் அது இன்னொருவரின் கதை என்று நெட்டிசன்ஸ் ஆதாரங்களை எடுத்து போட்டார்கள். சூழல் இப்படி இருக்க தனுஷின் அந்தப் பேச்சை வைத்து அவர் கண்டிப்பாக அரசியலுக்கு வருகிறார் என்றும்; விரைவில் விஜய்யின் ஆஸ்தான ஜோதிடரான ரத்தன் பண்டிட்டையும் சந்தித்து தன் ஜாதகத்தில் முதலமைச்சராகும் யோகம் இருக்கிறதா என்பதை தெரிந்துகொள்ளும் முடிவில் இருக்கிறார் என்றும் சொல்லப்படுகிறது.

ரத்தன் பேச்சு: இந்நிலையில் ரத்தன் பண்டிட் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், "2031ஆம் ஆண்டு தேர்தலில் திமுகவும், அதிமுகவும் சேர்ந்து விஜய்யை வீழ்த்த வருவார்கள் என சொன்னேன். இப்போது சொல்கிறேன்; தனுஷ் மட்டும் அரசியலுக்கு வந்துவிட்டால் திமுக, அதிமுக இருக்காது. இரண்டாவது இடத்துக்கு தனுஷ்தான் போட்டி" என்றார்.