📅 Tuesday, 17 November 2026 IST | கார்த்திகை 1, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema May 27, 2026 08:32 PM

தனுஷ் + சாரா அர்ஜுன், பிரபுதேவா + வடிவேலு, சிவராஜ்குமார் + அபிஷன் ஜீவிந்த்...

தனுஷ் + சாரா அர்ஜுன், பிரபுதேவா + வடிவேலு, சிவராஜ்குமார் + அபிஷன் ஜீவிந்த்...

தனுஷ் + சாரா அர்ஜுன், பிரபுதேவா + வடிவேலு, சிவராஜ்குமார் + அபிஷன் ஜீவிந்த்...

கலக்கல் கோலிவுட் காம்போக்கள்! - கோலிவுட் ஸ்பைடர்

தனுஷுடன் சாரா அர்ஜுன்!

`தெய்வத்திருமகள்’ சாரா அர்ஜுன், ‘துரந்தர்’ படத்தில் நடித்த பிறகு அவரது மார்க்கெட் எகிறிவிட்டது. தனுஷின் 56-வது படத்தில் அவரை ஹீரோயினாக கமிட் செய்ய பேச்சுவார்த்தை நடந்துவருகிறது. சாரா கோலிவுட்டிலும் நன்கு அறிமுகமானவர் என்பதால், அவரை ஒப்பந்தம் செய்ய தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள்.

முதன்முறையாக நடிக்கும் கஸ்தூரி ராஜா!

‘ஹபீபி’ படத்தில் அழுத்தமான ஒரு ரோலில் நடித்திருக்கிறார் இயக்குநர் கஸ்தூரி ராஜா. ``நான் இதுவரை நடித்ததில்லை. படத்தின் இயக்குநரான மீரா கதிரவன் என்மீது நம்பிக்கைவைத்து நடிக்கவைத்திருக்கிறார். என் கரியரில் நான் உயிருள்ளவரை சினிமாவில் இருப்பேன் என்ற நம்பிக்கையை இந்தப் படம் கொடுத்திருக்கிறது’’ என நெகிழ்கிறார் கஸ்தூரிராஜா. ‘ஹபீபி’க்கு பிறகு அழுத்தமான கதாபாத்திரங்களில் நடிக்கவும் விருப்பமாக இருக்கிறார்.

பிரபுதேவா + வடிவேலு... விரைவில் பராக்!

பிரபுதேவா நடிப்பில் ‘மைக்கேல் முசாசி’ படத்தை இயக்கிய சாம் ரோட்ரிகஸ், மீண்டும் பிரபுதேவாவுடன் கைகோத்திருக்கும் படம், ‘பேங் பேங்.’ இந்தப் படத்தில் பிரபுதேவாவுடன் வடிவேலு இணைந்து நடித்திருக்கிறார். பெரும்பாலான படப்பிடிப்பு மலேசியா, இந்தோனேசியாவில் முடிந்திருக்கிறது. அதிலும், இந்தோனேசியாவில் எரிமலைப் பகுதியிலும் சில காட்சிகளைப் படமாக்கி வந்திருக்கிறார்கள்.

சிவராஜ்குமாருடன் அபிஷன் ஜீவிந்த்!

‘டூரிஸ்ட் ஃபேமிலி’ இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் ‘வித் லவ்’ படத்தில் ஹீரோவாக அறிமுகமானார். தொடர்ந்து அவருக்கு ஹீரோ வாய்ப்புகள் கதவைத் தட்டுகின்றன. தற்போது, அவரும், கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமாரும் இணைந்து நடிக்கும் படம் தயாராகிவருகிறது. அப்பா - மகன் படமான இதை, ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படத்தின் இணை இயக்குநர் கவுதம் சிவராமன் இயக்குகிறார்.

சிக்ஸ் பேக் கௌதம்!

கௌதம் ராம் கார்த்திக் இப்போது வில்லனாகவும் நடிக்கத் தயாராக இருக்கிறார். `நடிகன் என்பவன் எல்லா வேடங்களையும் ஏற்கத் தயாராக இருக்க வேண்டும்’ என்று சொல்லும் கௌதம், இப்போது ‘சிக்ஸ் பேக்’ உடற்கட்டுடன் ரெடியாக இருக்கிறார்.

`டைரக்டர்’ பேசில்தான் பிடித்திருக்கிறதாம்!

மல்லுவுட் இயக்குநரும், நடிகருமான பேசில் ஜோசப், தனது நேரடி தமிழ்ப்படமான ‘ராவடி’யால் உற்சாகமாக இருக்கிறார். இதற்கிடையே, அவர் டொவினோ தாமஸுடன் நடிந்திருந்த ‘அதிரடி’யில் தமிழில் சொந்தக் குரலில் டப்பிங்கும் பேசியிருக்கிறார். ‘`நடிப்பு, டைரக்‌ஷன் இரண்டும் பிடிக்கும். ஆனால், டைரக்‌ஷன்தான் அதிகம் பிடித்திருக்கிறது. பேருந்தில் பயணிகள் இருக்கையில் இருப்பது போன்றது நடிப்பு. ஆனால், டைரக்‌ஷன் அப்படியல்ல. பேருந்தை நானே டிரைவ் செய்வது போன்றது. எனக்கு ஓட்டுநர் இருக்கையில் இருப்பதுதான் அதிகம் பிடித்திருக்கிறது. நடிப்பு, இயக்கம் இரண்டையும் ஒருசேரச் செய்வது கடினமாக இருக்கும்’’ என்கிறார் பேசில் ஜோசப்.

தனக்குத் தானே சமந்தா வைத்துக்கொண்ட பெயர்!

சமந்தாவின் ‘மா இன்டி பங்காரம்’ அடுத்த மாதம் திரைக்கு வருகிறது. அவர் சமீபத்திய நேர்காணல் ஒன்றில், ‘`எனக்கு இன்னொரு பெயர் இருக்கிறது. அது வெளியே யாருக்கும் தெரியாது. எனக்கு அதுதான் பொருத்தமாக இருக்கும் என்று எனக்கு நானே அந்தப் பெயரை வைத்துக்கொண்டேன். அந்தப் பெயர், யசோதா. என் கணவருக்கும் அந்தப் பெயர் பிடித்துப்போய், அப்படித்தான் அழைக்கிறார். அதனால்தான் ‘யசோதா’ என்ற கேரக்டரில் ஒரு படத்தில் நடிக்க அழைத்தபோது உடனே ஒப்புக்கொண்டேன்’’ என்று சொல்லியிருக்கிறார்.