📅 Friday, 07 August 2026 IST | ஆடி 22, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Sri Lanka August 07, 2026 01:32 PM

தோனி கூட இல்ல.. மாபெரும் சாதனையை படைக்க இருக்கிறார் ரிஷப் பண்ட்.. இலங்கை தொடரில் வாய்ப்பு

தோனி கூட இல்ல.. மாபெரும் சாதனையை படைக்க இருக்கிறார் ரிஷப் பண்ட்.. இலங்கை தொடரில் வாய்ப்பு

தோனி கூட இல்ல.. மாபெரும் சாதனையை படைக்க இருக்கிறார் ரிஷப் பண்ட்.. இலங்கை தொடரில் வாய்ப்பு

கொழும்பு: இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில், இந்திய விக்கெட் கீப்பர்-பேட்டர் ரிஷப் பண்ட் புதிய வரலாற்று சாதனை ஒன்றை படைக்க உள்ளார். ஆகஸ்ட் 15 அன்று காலே சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கும் இந்த இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் கீப்பராக பண்ட் களம் இறங்குவார்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025-27 சுழற்சியில் இந்தியாவின் இந்த நான்காவது டெஸ்ட் தொடரில், பண்ட் வரலாறு படைக்க சிறந்த வாய்ப்பு அமைந்துள்ளது. ஆகஸ்ட் 2018 இல் நாட்டிங்ஹாமில் உள்ள ட்ரெண்ட் பிரிட்ஜில் இங்கிலாந்துக்கு எதிராக தனது டெஸ்ட் அறிமுகத்தை மேற்கொண்ட பண்ட், இதுவரை 50 டெஸ்ட் போட்டிகளில் 97 சிக்ஸர்களை விளாசியுள்ளார்.

இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய வீரர் ஒருவரால் அடிக்கப்பட்ட அதிகபட்ச சிக்ஸர்களின் சாதனையை அவர் ஏற்கனவே தன்வசம் வைத்துள்ளார். டெஸ்ட் போட்டிகளில் இந்தியாவிற்காக அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர்களின் பட்டியலில் ரிஷப் பண்ட் 50 போட்டிகளில் 3557 ரன்களுடன் 97 சிக்ஸர்களை விளாசி முதலிடத்தில் உள்ளார்.

அவருக்கு அடுத்தபடியாக வீரேந்தர் சேவாக் 90 சிக்ஸர்களுடனும், ரோஹித் சர்மா 88 சிக்ஸர்களுடனும் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர். ரவீந்திர ஜடேஜா 82 சிக்ஸர்கள், தோனி 78 சிக்ஸர்கள், சச்சின் டெண்டுல்கர் 69 சிக்ஸர்கள், கபில் தேவ் 61 சிக்ஸர்கள், சௌரவ் கங்குலி 57 சிக்ஸர்கள், சுப்மன் கில் 47 சிக்ஸர்கள் மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 45 சிக்ஸர்களுடன் இந்த பட்டியலில் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.

இலங்கைக்கு எதிரான இந்தத் தொடரில், டெஸ்ட் கிரிக்கெட்டில் 100 சிக்ஸர்களை அடித்த முதல் இந்திய பேட்டர் என்ற வரலாற்று சாதனையை படைப்பதை ரிஷப் பண்ட் படைக்க இருக்கிறார். இந்த மைல்கல்லை எட்ட அவருக்கு இன்னும் மூன்று சிக்ஸர்கள் மட்டுமே தேவைப்படுகின்றன.

இதுவரை உலக அளவில் ஆடம் கில்கிறிஸ்ட், பிரெண்டன் மெக்கல்லம் மற்றும் பென் ஸ்டோக்ஸ் ஆகிய மூன்று வீரர்கள் மட்டுமே டெஸ்ட் கிரிக்கெட்டில் 100 அல்லது அதற்கு மேற்பட்ட சிக்ஸர்களை அடித்துள்ளனர்.இங்கிலாந்தின் முன்னாள் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 2013 முதல் 2026 வரை 122 டெஸ்ட் போட்டிகளில் 138 சிக்ஸர்களுடன் உலகளவில் முதலிடத்தில் உள்ளார்.

அவரைத் தொடர்ந்து நியூசிலாந்தின் பிரெண்டன் மெக்கல்லம் 101 டெஸ்ட் போட்டிகளில் 107 சிக்ஸர்களுடன் இரண்டாம் இடத்தில் உள்ளார். ஆஸ்திரேலியாவின் முன்னாள் விக்கெட் கீப்பர்-பேட்டர் ஆடம் கில்கிறிஸ்ட், டெஸ்ட் போட்டிகளில் முதன்முதலாக 100 சிக்ஸர்களை அடித்த வீரர் என்ற சாதனையைப் படைத்தார். அவர் 1999 மற்றும் 2008 க்கு இடையில் 96 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி சரியாக 100 சிக்ஸர்களுடன் தனது சர்வதேச வாழ்க்கையை முடித்துக் கொண்டார்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர்களின் பட்டியலில் பென் ஸ்டோக்ஸ் 88 சிக்ஸர்களுடன் முதலிடத்திலும், ரிஷப் பண்ட் 77 சிக்ஸர்களுடன் இரண்டாம் இடத்திலும், ரோஹித் சர்மா 56 சிக்ஸர்களுடன் மூன்றாம் இடத்திலும் உள்ளனர். சுப்மன் கில் 46 சிக்ஸர்கள், யஷஸ்வி ஜெய்ஸ்வால் 45 சிக்ஸர்கள், ஹாரி புரூக் 44 சிக்ஸர்கள், ரவீந்திர ஜடேஜா 42 சிக்ஸர்கள், டிராவிஸ் ஹெட் 40 சிக்ஸர்கள், டாரில் மிட்செல் 38 சிக்ஸர்கள் மற்றும் ஜானி பேர்ஸ்டோ 32 சிக்ஸர்களுடன் இந்த பட்டியலில் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.