📅 Sunday, 16 August 2026 IST | ஆடி 31, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema July 27, 2026 05:32 PM

தடுத்து நிறுத்த முடியாத ’ஜனநாயகன்’.. 4 நாட்களில் 200 கோடி வசூலை கடந்து சாதனை! உலகளவில் 7வது இடம்!

தடுத்து நிறுத்த முடியாத ’ஜனநாயகன்’.. 4 நாட்களில் 200 கோடி வசூலை கடந்து சாதனை! உலகளவில் 7வது இடம்!

தடுத்து நிறுத்த முடியாத ’ஜனநாயகன்’.. 4 நாட்களில் 200 கோடி வசூலை கடந்து சாதனை! உலகளவில் 7வது இடம்!

ஹெச்.வினோத் இயக்கத்தில் முதல்வர் விஜயின் கடைசி படமான ‘ஜனநாயகன்’, சிபிஎஃப்சியின் தாமதம், இணைய லீக், கலவையான விமர்சனங்கள் போன்ற தடைகளை தாண்டியும், வெளியீட்டின் நான்கு நாட்களில் இந்தியாவில் ரூ.145.98 கோடி, உலகளவில் ரூ.217.48 கோடி வசூலித்து, விஜயின் 9வது 200 கோடி கிளப் படமாக சாதனை படைத்துள்ளது; ரசிகர்கள் உணர்ச்சி வெள்ளத்தில் கொண்டாடுகின்றனர்.

ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜயின் கடைசிப் படமாக உருவானது ‘ஜனநாயகன்’. இந்தாண்டு பொங்கல் வெளியீடாக ஜனவரி 9ஆம் தேதி படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. CBFCயிலிருந்து சான்றிதழ் வருவதில் சிக்கல்கள் ஏற்பட, அந்த தடைகளை எல்லாம் கடந்து ஏழு மாதங்களுக்கு பின் ஜூலை 23ஆம் தேதி வெளியானது.

முதல்வர் விஜயின் கடைசி படம் என்பதால், ரசிகர்கள் இப்பட வெளியீட்டை பெரிய அளவில் கொண்டாட்டி வருகின்றனர். விமர்சன ரீதியில் படம் சார்ந்து கலவையான கருத்துக்களே சொல்லப்பட்டாலும், படத்தின் இறுதியில் விஜயின் அனைத்து படங்களின் மாஷப் போன்று வைக்கப்பட்ட காட்சிகளின் தொகுப்பு ரசிகர்களின் கண்களை ஈரமாக்கியது. பல ரசிகர்கள் தியேட்டரில் கண்ணீர்விட்ட காட்சிகள் இணையத்தில் வலம்வந்தன.

இந்நிலையில் இணையத்தில் லீக்கானதை கடந்து கலவையான விமர்சனங்களை பெற்றபோதிலும், ஜனநாயகன் திரைப்படம் வசூல் ரீதியில் சாதனை செய்துள்ளது. பல மாதங்களுக்கு முன்பே இணையத்தில் கசிந்த திரைப்படம், திரையரங்க வெளியீட்டில் இவ்வளவு வரவேற்பை பெற்றுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

4 நாட்களில் 200 கோடியை கடந்த வசூல்..!

ஜனநாயகன் திரைப்படத்தின் வசூலை பொறுத்தவரையில் முதல் நாளிலேயே இந்திய அளவில் கிராஸ் 48 கோடியாகவும், வெளிநாட்டில் 30 கோடியாகவும் மொத்தம் 78 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது. தொடர்ந்து இணையத்தில் கலவையான விமர்சனங்களை சந்தித்த இத்திரைப்படம், இரண்டாவது நாளில் இந்திய அளவில் 22 கோடியாக குறைந்தாலும், அடுத்தடுத்த நாட்களில் 28 கோடி, 32 கோடி வசூல் என ஏறுமுகத்தையே கண்டுள்ளது.

4 நாட்கள் முடிவில் ஜனநாயகன் திரைப்படம் இந்திய அளவில் மொத்த வசூல் ரூ. 145.98 கோடியையும், உலகளவில் ரூ. 217.48 கோடியையும் வசூலித்து சாதனை படைத்துள்ளது. இதன்மூலம் விஜய் தன்னுடைய சினிமா கரியரில் 9வது முறையாக 200 கோடி வசூல் திரைப்படத்தை கொடுத்து வரலாறு படைத்துள்ளார்.

மேலும் ரென்ட்ராக்கின் முதல் வார இறுதியில் உலகளவில் அதிக வசூல் செய்த திரைப்படங்களின் பட்டியலில் டாப் 10-க்குள் நுழைந்திருக்கும் ஜனநாயகன் திரைப்படம் 7வது இடத்தை பிடித்து அசத்தியுள்ளது. இப்படம் ’தி ஒடிஸி', 'டாய் ஸ்டோரி 5', 'மோனா' மற்றும் 'மினியன்ஸ் & மான்ஸ்டர்ஸ்' போன்ற முக்கிய ஹாலிவுட் வெளியீடுகளுடன் பட்டியலைப் பகிர்ந்து கொண்டது.