📅 Saturday, 20 June 2026 IST | ஆனி 6, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Latest News June 20, 2026 09:32 PM

"தூய சக்தி முழக்கம் எங்கே போனது?" மூதாட்டிக்குக்கூட பாதுகாப்பில்லாத ஆட்சி தான் மாற்றமா?

"தூய சக்தி முழக்கம் எங்கே போனது?" மூதாட்டிக்குக்கூட பாதுகாப்பில்லாத ஆட்சி தான் மாற்றமா?

"தூய சக்தி முழக்கம் எங்கே போனது?" மூதாட்டிக்குக்கூட பாதுகாப்பில்லாத ஆட்சி தான் மாற்றமா?

பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

ஈரோடு பவானியில் 74 வயது மூதாட்டியை தாக்கி 2 போதை இளைஞர்கள் பாலியல் வன்கொடுமை செய்ததாக வெளிவந்துள்ள செய்தி மனதைப் பதைபதைக்கச் செய்கிறது. முந்தைய திமுக ஆட்சியின் பலனாக தமிழகத்தின் மூலை முடுக்கெங்கும் சாராயமும், போதைப்பொருட்களும் வேர்விட்டுப் பரவிய நிலையில், தற்போதைய ஜோசப் விஜய் அரசின் மெத்தனத்தால் பச்சிளம் குழந்தை முதல் பல் விழுந்த மூதாட்டி வரை அனைவரின் பாதுகாப்பும் சூறையாடப்பட்டு வருகிறது.

பிரசாரத்தின்போது "தூய சக்தி" என்று முழங்கிவிட்டு, ஆட்சி அமைத்ததும் மௌனவிரதமிருந்து மகளிர் பாதுகாப்பை பறிப்பதுதான் "மாற்றமா" முதல்வர் விஜய் அவர்களே? "மனம் குமுறுகிறது, கண் கலங்குகிறது" என இனியும் வசனம் பேசாமல், தமிழகப் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் மும்முரமாகச் செயல்படுங்கள் என்று கூறியுள்ளார்.

மூதாட்டிக்குக்கூட பாதுகாப்பில்லாத ஆட்சி தான் மாற்றமா?ஈரோடு மாவட்டம் பவானியில் 74 வயது மூதாட்டியை தாக்கி 2 போதை இளைஞர்கள் பாலியல் வன்கொடுமை செய்ததாக வெளிவந்துள்ள செய்தி மனதைப் பதைபதைக்கச் செய்கிறது. முந்தைய திமுக ஆட்சியின் பலனாக தமிழகத்தின் மூலை முடுக்கெங்கும் சாராயமும்…