📅 Wednesday, 05 August 2026 IST | ஆடி 20, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics August 05, 2026 09:31 PM

தவெக அரசின் பெயர் மாற்றத் திட்டத்திற்கு எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது?

தவெக அரசின் பெயர் மாற்றத் திட்டத்திற்கு எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது?

முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசின் முதல் பட்ஜெட், இன்று சட்டப்பேரவையில் நிதியமைச்சர் மரிய வில்சனால் தாக்கல் செய்யப்பட்டது.

இதில் கடந்த ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களுக்கும் நிதிகள் ஒதுக்கப்பட்டன. ஆனால் அத்திட்டங்களின் பெயர்கள் மாற்றப்பட்டு, நிதிகள் ஒதுக்கப்பட்டன. இந்நிலையில் பெயர் மாற்ற திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதி எவ்வளவு என திமுக எம்.பி. கனிமொழி விமர்சனம் செய்துள்ளார்.

பட்ஜெட் தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில்.,

தவெக அரசு தேர்தல் வாக்குறுதிகளாக அளித்த எதையும் செயல்படுத்தப் போவதில்லை என்பதையே இந்த நிதிநிலை அறிக்கை தமிழ்நாட்டு மக்களுக்கு உணர்த்தியுள்ளது.

இந்த அரசின் முக்கிய திட்டமான பெயர் மாற்றத் திட்டத்திற்கு எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்று நிதிநிலை அறிக்கையில் குறிப்பிடாதது ஏமாற்றம் அளிக்கிறது.

மாற்றம் என்று சொன்னது பெயர் மாற்றத்தைத் தானா? மக்கள் நலத்திட்டங்கள் எல்லாம் தி.மு.க செயல்படுத்தியதாகவே உள்ளது.” எனக் குறிப்பிட்டுள்ளார்.