📅 Friday, 02 October 2026 IST | புரட்டாசி 16, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics July 27, 2026 08:31 PM

"தவெக அரசுக்கு நீதிமன்றம் வைத்த செக்!" கரூர் கூட்டநெரிசலில் பலியான குடும்பங்களின் பணி நியமனம் ரத்து

"தவெக அரசுக்கு நீதிமன்றம் வைத்த செக்!" கரூர் கூட்டநெரிசலில் பலியான குடும்பங்களின் பணி நியமனம் ரத்து

கரூர் கூட நெரிசலில் சிக்கி பலியானோர் குடும்பத்திற்கு தமிழ்நாடு அரசு வழங்கிய பணி ஆணையை உயர்நீதிமன்ற மதுரை கிளை ரத்து செய்துள்ளது. கடந்த 2025-ஆம் ஆண்டு செப்டம்பர் 27-ம் தேதி, தவெக தலைவர் ஜோசப் விஜய் கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்றார். அவரை நேரில் காண மிகக் குறுகிய சாலையில் லட்சக்கணக்கான மக்கள் திரண்டதால், நிகழ்ச்சி நடைபெற்றுக்கொண்டிருந்த சில நிமிடங்களில் கடுமையான கூட்ட நெரிசல் ஏற்பட்டது. அந்த சோகச் சம்பவத்தில் மூச்சுத்திணறி 41 பேர் உயிரிழந்தது, தமிழகம் மட்டுமல்லாமல் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதையடுத்து அவர் நேரடியாக கரூர் செல்ல முடியாத சூழல் நிலவி வந்த நிலையில் உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினரையும் பின்னர் சென்னையில் உள்ள தனியார் சொகுசு ஹோட்டலுக்கு அழைத்து வந்து நேரில் சந்தித்து ஆறுதல் கூறியதுடன், மன்னிப்பும் கேட்டு தவெக சார்பில் நிவாரண உதவிகளை வழங்கி இருந்தார். அதன் பின்னர் சுமார் 9 மாதங்களுக்குப் பிறகு அவர் முதலமைச்சராக பொறுப்பேற்ற பின்னர் ஜூலை 10 அன்று கரூர் சென்ற நிலையில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தை சந்தித்தார்.

மேலும், உயிரிழந்தோர் குடும்பத்திற்கு அரசுத் துறையின் கீழ் பணியாற்றும் வகையில் 31 நபர்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் விஜய் வழங்கினார். இந்நிலையில், முதல்வர் வழங்கிய இந்த அரசாணைக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்வினைகள் கிளம்பின. பலவேறு தரப்பினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். பல்வேறு மாணவ மாணவிகள் மற்றும் அரசு வேலையில் சேர விரும்பும் பலரும் இராப்பகலாக படித்தும் அவர்களுக்கு வேலை கிடைக்காமல் இருக்கும் நிலையில், விஜயின் தேர்தல் பிரச்சாரத்திற்கு வந்து கூட்டநெரிசலில் உயிரிழந்தவர்களுக்கு அரசாணை வழங்குவது என்பது சரியானது அல்ல என்று பலரும் தங்களது கருத்துக்களை கூறினர். தற்போது இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், "கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு வழங்கிய அரசாணை செல்லாது, அதனை ரத்து செய்கிறோம்" என்று தெரிவித்துள்ளனர். மேலும், இதுகுறித்து பேசிய நீதிபதிகள் "சாலை விபத்தில் நாள்தோறும் விபத்துக்கள் நடந்துள்ளது, அவர்களுக்கு அரசு வேலை வழங்கமுடியுமா?. பட்டாசு ஆலையில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு அரசு வேலை கோருகின்றனர்" என்று கேள்விகள் எழுப்பியுள்ளனர்.

நீதிபதிகள், சி.வி. கார்த்திகேயன், சக்திவேல் ஆகியோர் அமர்வில் இந்த வழக்கில் சற்றும் எதிர்பார்க்காத தீர்ப்பு வெளிவந்துள்ளது. மேலும், முதல்வர் விஜய் வழங்கிய பணி ஆணையை ரத்து செய்ததோடு, அது செல்லாது என்று அறிவித்துள்ளனர். மேலும், பொதுமக்களே ஏற்றுக்கொள்ளாத சூழ்நிலையில் நீதிமன்றமும் அதை கருத்தில் கொண்டு ரத்து செய்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், "கரூர் கூட்டநெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு சாதாரண பணி வழங்கியதாக அரசு கூறுவதை ஏற்க முடியாது; கருணை அடிப்படையில் வேலை பெற பலர் காத்திருக்கும் நிலையில் கரூரில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு முன்னுரிமை ஏன்? என நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

அரசு தரப்பு வழக்கறிஞர்கள் இது தனிப்பட்ட கொள்கை முடிவு அல்ல. அரசின் கொள்கை முடிவாகத்தான் இதை பார்க்கிறோம் என்று பல்வேறு வாதங்களை முன்வைத்தனர். இருப்பினும் நீதிபதிகள் ஆணித்தரமாக தங்களின் தீர்ப்பினை வழங்கியுள்ளனர். தற்போது, கொட்ட நெரிசலில்க் உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு அரசு பணி வழங்கியதை உயர்நீதிமன்ற மதுரை கிளை ரத்து செய்த நிலையில் உச்சநீதிமன்றத்தை நாட தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும்ம் நாளை உச்சநீதி மன்றத்தில் தமிழாண்டு அரசு சார்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்படும் என சட்டத்துறை அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்துள்ளார். மேலும், அரசு பணி நியமன ஆணை பெற்றவர்களை வழக்கில் எதிர் மனுதாரராக சேர்க்கவில்லை என்றும் அரசு பணி ஆணை பெற்றவர்களின் வாதங்களை கேட்காமல் உயர்நீதிமன்றம் தீர்பளித்துள்ளதாக அமைச்சர் நிர்மல்குமார் கூறியுள்ளார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.