📅 Monday, 17 August 2026 IST | ஆவணி 1, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics July 19, 2026 01:33 PM

டிகிரி முடித்தவர்களுக்கு நாகப்பட்டினத்தில் கலெக்டர் ஆபீஸ் வேலை: ஆன்லைனில்

டிகிரி முடித்தவர்களுக்கு நாகப்பட்டினத்தில் கலெக்டர் ஆபீஸ் வேலை: ஆன்லைனில்

டிகிரி முடித்தவர்களுக்கு நாகப்பட்டினத்தில் கலெக்டர் ஆபீஸ் வேலை: ஆன்லைனில் விண்ணப்பம் பெறுவது எப்படி?

நாகப்பட்டினம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் (DCPU) காலியாக உள்ள பாதுகாப்பு அலுவலர் பணியிடத்திற்கு ரூ.27,804 தொகுப்பூதியத்தில் விண்ணப்பங்கள் பெறப்படுவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

நாகப்பட்டினம்: நாகப்பட்டினம் மாவட்டத்தில் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறையின் கீழ் செயல்பட்டு வரும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் (DCPU) காலியாக உள்ள ஒரு முக்கியப் பணியிடத்திற்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் கே.ஜே. பிரவீன் குமார், வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

மத்திய மற்றும் மாநில அரசின் கூட்டுப் பங்களிப்புடன் செயல்படுத்தப்பட்டு வரும் 'மிஷன் வாட்சல்யா' (Mission Vatsalya) திட்டத்தின் கீழ் இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

குழந்தைகளின் உரிமைகளைப் பாதுகாக்கவும், அவர்களுக்கான நலத்திட்டங்களை தடையின்றி கொண்டு சேர்க்கவும் இந்த மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு தீவிரமாகச் செயலாற்றி வருகிறது. இதன் ஒரு பகுதியாக தற்போதைய காலிப் பணியிடம் நிரப்பப்பட உள்ளது.

* பதவியின் பெயர்: பாதுகாப்பு அலுவலர் (நிறுவனம் சாரா - Non-Institutional Care)* காலிப் பணியிடங்கள்: 01* பணித்தன்மை: முற்றிலும் ஒப்பந்த அடிப்படை (Consolidated Pay)* மாதாந்திர தொகுப்பூதியம்: ரூ. 27,804/-

இந்தத் தகுதி வாய்ந்த பணியிடத்திற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் பின்வரும் கல்வித்தகுதி மற்றும் பணி அனுபவத்தைக் கொண்டிருக்க வேண்டும்.

முதுகலை தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் சமூகப்பணி (MSW), சமூகவியல், குழந்தைகள் வளர்ச்சி, மனித உரிமைகள், பொது நிர்வாகம், உளவியல், மனநலம், சட்டம், பொது சுகாதாரம் அல்லது சமூக வள மேலாண்மை ஆகியவற்றில் ஏதேனும் ஒரு பிரிவில் முதுகலை தட்டம் (Post Graduate) பெற்றிருக்க வேண்டும்.

இளங்கலை தகுதி (அனுபவத்துடன்): மேற்கண்ட ஏதேனும் ஒரு துறையில் இளங்கலை பட்டம் (Under Graduate) பெற்றவர்கள் எனில், திட்ட உருவாக்கம், சமூக நலம், பெண்கள் மற்றும் குழந்தைகள் வளர்ச்சியில் திட்டங்களைச் செயல்படுத்துதல், கண்காணித்தல் மற்றும் மேற்பார்வையிடுதல் போன்ற பணிகளில் குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

கூடுதல் தகுதி: விண்ணப்பதாரர்கள் அடிப்படை கணினி அறிவு (Computer Knowledge) பெற்றிருப்பது அவசியமாகும்.வயது வரம்பு: விண்ணப்பதாரர்கள் 42 வயதிற்கு உட்பட்டவராக இருத்தல் வேண்டும்.

இப்பணிக்கு விண்ணப்பிக்கத் தேவையான அதிகாரப்பூர்வ விண்ணப்பப் படிவங்களை இரண்டு வழிகளில் பெற்றுக் கொள்ளலாம்.1. இணையதளம் வழியாக: நாகப்பட்டினம் மாவட்டத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.nagapattinam.tn.nic.in என்ற முகவரிக்குச் சென்று விண்ணப்பத்தை இலவசமாகப் பதிவிறக்கம் (Download) செய்து கொள்ளலாம்.

2. நேரடியாகப் பெறுதல்: இணைய வசதி இல்லாதவர்கள் நாகப்பட்டினத்தில் உள்ள மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்திற்கு நேரில் சென்றும் விண்ணப்பப் படிவங்களைப் பெற்றுக்கொள்ளலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்களுடன், தங்களின் கல்விச்சான்றிதழ்கள், வயதுச் சான்று, இருப்பிடச் சான்று மற்றும் பணி அனுபவச் சான்றிதழ்களின் நகல்களை (Self-Attested Photocopies) இணைத்து அனுப்ப வேண்டும்.விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம், அறை எண். 209, இரண்டாம் தளம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், நாகப்பட்டினம் - 611003.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 07.08.2026 (வெள்ளிக்கிழமை) மாலை 5.45 மணிக்குள் மேற்கண்ட முகவரிக்கு விண்ணப்பங்கள் போய்ச் சேர வேண்டும். குறிப்பிட்ட நேரத்திற்குப் பிறகு வரும் விண்ணப்பங்கள் எக்காரணம் கொண்டும் பரிசீலிக்கப்பட மாட்டாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பு, தகுதிகள் மற்றும் விண்ணப்பிக்கும் முறை குறித்த கூடுதல் சந்தேகங்கள் அல்லது விபரங்கள் தேவைப்படும் விண்ணப்பதாரர்கள், அலுவலக வேலை நேரங்களில் 04365 - 253018 என்ற தொலைபேசி எண்ணிற்குத் தொடர்பு கொண்டு விளக்கம் பெற்றுக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் கே.ஜே. பிரவீன் குமார், தனது செய்திக்குறிப்பில் மேலும் குறிப்பிட்டுள்ளார். தகுதியும் ஆர்வமும் உள்ள நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த நபர்கள் இந்த நல்வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

தலைப்பு செய்திகள்

ஃபோட்டோ கேலரி