📅 Monday, 17 August 2026 IST | ஆவணி 1, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema May 27, 2026 04:30 PM

டில்லி புறப்பட்டார் முதல்வர் விஜய்; பரபரக்கும் அரசியல் களம்

டில்லி புறப்பட்டார் முதல்வர் விஜய்; பரபரக்கும் அரசியல் களம்

சென்னை: பிரதமர் மோடி, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோரை சந்திப்பதற்காக, முதல்வர் விஜய் இன்று டில்லி புறப்பட்டு சென்றார்.

தமிழக முதல்வராக, கடந்த 10ம் தேதி விஜய் பதவியேற்றார். முதல்வரான பின், முதல் முறையாக, இன்று காலை 9:30 மணிக்கு தனி விமானத்தில் விஜய் புறப்பட்டு சென்றார். அவர் டில்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்திற்கு செல்கிறார்.

பிரதமர் மோடி, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோரை சந்தித்து பேசுகிறார். தமிழக அரசுக்கு தேவையான திட்டங்களுக்கு, நிதி வழங்கக் கோரி, கோரிக்கை மனுவை அளிக்க உள்ளார்.

டில்லி ஜவஹர்லால் நேரு பல்கலையில், திருவள்ளுவர் சிலை திறப்பு விழாவில் பங்கேற்கிறார். நாளை சென்னை திரும்புகிறார் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமலர் நேரலை; வீடியோ பாருங்கள்!

மோடியை சந்திக்க புறப்பட்ட விஜய்; முக்கிய அப்டேட் குறித்து தினமலர் யூடியூப் மற்றும் வெப்சைட் உள்ளிட்ட இணையத்தில் நேரலை ஒளிபரப்பு

வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்