📅 Monday, 05 October 2026 IST | புரட்டாசி 19, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Latest News August 05, 2026 07:30 AM

டிரம்ப்பின் கோல்ஃப் மைதானத்தில் ஆயுதம் ஏந்தியவர் கைது

டிரம்ப்பின் கோல்ஃப் மைதானத்தில் ஆயுதம் ஏந்தியவர் கைது

லாஸ் ஏஞ்சலிஸ்: அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலிஸ் நகரில் உள்ள, அந்நாட்டு அதிபர் டோனல்ட் டிரம்ப்பின் கோல்ஃப் மைதானத்தில் ஆயுதம் ஏந்திய ஆடவர் ஒருவர் கைது செய்யப்பட்டதாக உள்ளூர் காவல்துறை அலுவலகம் தெரிவித்தது.

திரு டிரம்ப் செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 4) லாஸ் ஏஞ்சலிசுக்குப் பயணம் மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டிருந்தது. அதற்கு இரு நாள்களுக்கு முன்பு இச்சம்பவம் நிகழ்ந்தது.

சந்தேக நபர், அண்டை நகரான டெளனியைச் சேர்ந்த 38 வயது ஜீனின் ஜான் டெயில் என அடையாளம் காணப்பட்டுள்ளார். ராஞ்சோ பாலோஸ் வெர்டெஸ் பகுதியில் உள்ள கோல்ஃ மைதானத்தில் அவர் ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 2) பிற்பகல் கைது செய்யப்பட்டார்.