📅 Sunday, 07 June 2026 IST | வைகாசி 24, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Latest News June 07, 2026 09:30 AM

TN Weather Update: இடி, மின்னல் மிரட்ட..! 14 மாவட்டங்களில் இன்று கனமழை, சென்னை? தமிழக வானிலை

TN Weather Update: இடி, மின்னல் மிரட்ட..! 14 மாவட்டங்களில் இன்று கனமழை, சென்னை? தமிழக வானிலை

TN Weather Update: இடி, மின்னல் மிரட்ட..! 14 மாவட்டங்களில் இன்று கனமழை, சென்னை? தமிழக வானிலை வார்னிங்

TN weather Rain Update: (07-06-2026): தமிழ்நாட்டின் 14 மாவட்டங்களில் இன்று இடி, மின்னல் மற்றும் பலத்த காறுடன் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது.

TN weather Rain Update: (07-06-2026): சென்னையில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது.

14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, “சுமார் 3.1 கிமீ உயரத்தில் வடக்கு கேரளா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. அதன் காரணமாக தமிழகத்தில் இன்று ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தென்காசி, திருநெல்வேலி, கோயம்புத்தூர் மாவட்டங்களின் மலைப்பகுதிகள், நீலகிரி. திருப்பூர், திண்டுக்கல், தேனி, கன்னியாகுமரி, ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, மதுரை மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கனமழையும் பெய்யக்கூடும்.

அடுத்த மூன்று நாட்களுக்கான வானிலை

08-06-2026: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தென்காசி, திருநெல்வேலி, கோயம்புத்தூர் மாவட்டங்களின் மலைப்பகுதிகள், நீலகிரி, திருப்பூர்..தேனி, திண்டுக்கல், கன்னியாகுமரி, ஈரோடு மற்றும் சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கனமழை பெய்யக்கூடும்.

09-06-2026: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தென்காசி, திருநெல்வேலி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல் மாவட்டங்களின் மலைப்பகுதிகள், தேனி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கனமழையும் பெய்யக்கூடும்.

10-06-2026: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

திருநெல்வேலி மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கனமழையும் பெய்யக்கூடும்.

சென்னை பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:

சென்னையை பொறுத்தவரை இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 39-40° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 29-30° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

இதையும் படியுங்கள்: Senthil Balaji: நள்ளிரவில் திமுக ஷாக்..! செந்தில் பாலாஜி வழக்கு, அமலாக்கத்துறைக்கு ஓகே சொன்ன ஆளுநர்?

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

07-06-2026 முதல் 10-06-2026 வரை: தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

07-06-2026 முதல் 09-06-2026 வரை: அந்தமான் கடல் பகுதிகள், மத்திய வங்கக்கடலின் அநேக பகுதிகள் மற்றும் தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

07-06-20265 09-06-2026: கேரள-கர்நாடக கடலோரப்பகுதிகள் மற்றும் கிலோ மீட்டர் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள், லட்சத்தீவு-மாலத்தீவு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்” என வானிலை மையம் எச்சரித்துள்ளது.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

தலைப்பு செய்திகள்

ஃபோட்டோ கேலரி