📅 Friday, 07 August 2026 IST | ஆடி 22, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Religion August 07, 2026 02:34 PM

Today Rasipalan: இன்றைய ராசிபலன் 7.8.2026

Today Rasipalan: இன்றைய ராசிபலன் 7.8.2026

தேவைகள் பூர்த்தியாகும் நாள். தொழிலில் ஏட்டிக்குப் போட்டியாக இருந்தவர்கள் இனி ஒத்துவருவர். கடன் சுமை குறையப் புதிய வழி பிறக்கும். பயணங்களால் பலன் உண்டு.

சந்தித்த நண்பர்களால் சந்தோஷம் கிடைக்கும் நாள். தொலைதூரத்திலிருந்து நல்ல செய்தி வந்து சேரும். திருமண முயற்சி வெற்றி பெறும்.

துன்பங்கள் தூர ஓடும் நாள். நல்ல செய்திகள் இல்லம் தேடி வரும். திடீர் பயணங்களால் திசை திருப்பம் ஏற்படலாம். அரசு வழியில் ஆதாயம் உண்டு.

வெற்றிச் செய்திகள் வீடு வந்து வந்து சேரும் நாள். பணத்தேவைகள் பூர்த்தி யாகும். உத்தியோகத்தில் பிற நிறுவனங்களிலிருந்து அழைப்புகள் வரலாம்.

நேற்றைய பிரச்சினை இன்று முடிவிற்கு வரும் நாள். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழ்வீர்கள். செல்வாக்கு மேலோங்கும். வரன்கள் முடிவாகும்.

விருப்பங்கள் நிறைவேறும் நாள். தொழில் வளர்ச்சிக்கு குறுக்கீடாக இருந்தவர்கள் விலகுவர். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு உண்டு.

யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். பணவரவில் தாமதங்கள் ஏற்படும். உத்தியோகத்தில் சக பணியாளர்களின் ஆதரவு குறையும்.

விருச்சிகம்

வியக்கும் செய்தி வீடு தேடி வந்து சேரும் நாள். கனிவாகப் பேசிக் காரியங்களைச் சாதித்துக்கொள்வீர்கள். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும்.

பயணங்களால் பலன் கிடைக்கும் நாள். பழகிய நண்பர்களால் பாராட்டுகளைப் பெறுவீர்கள். முடங்கிக் கிடந்த தொழிலில் முன்னேற்றம் ஏற்படும்.

மதியத்திற்குமேல் மனக்குழப்பம் ஏற்படும் நாள். நிச்சயிக்கப்பட்ட காரியங்களில் சில மாற்றங்கள் ஏற்படும். விரயம் கூடும். நண்பர்களை நம்பிச் செயல்பட இயலாது.

எண்ணங்கள் நிறைவேறும் நாள். யாரிடமும் பகை பாராட்டாமல் பக்குவமாக நடந்து கொள்வது நல்லது. தொழில் முன்னேற்றத்திற்கு நண்பர்கள் துணைபுரிவர்.

வரவு திருப்தி தரும் நாள். நல்லவர்களின் சந்திப்பு உண்டு. உத்தியோகத்தில் உங்கள் செயல்பாடுகள் மற்றவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தும்.