📅 Monday, 17 August 2026 IST | ஆவணி 1, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics July 20, 2026 05:31 PM

Top Headlines Today : 5 மணி முக்கிய செய்திகள்’ இதை தெரிந்துகொண்டாலே போதும்..!

Top Headlines Today : 5 மணி முக்கிய செய்திகள்’ இதை தெரிந்துகொண்டாலே போதும்..!

Top Headlines Today : 5 மணி முக்கிய செய்திகள்’ இதை தெரிந்துகொண்டாலே போதும்..!

தமிழ்நாட்டின் இன்றைய டாப் 10 தலைப்புச் செய்திகள் இவை’ இதை படித்தால்போதும் ஒரு நாளிதழை முழுமையாக படித்த அனுபவம் வாய்க்கும்..!

இன்றைய டிஜிட்டல் உலகில் செய்தித்தாள்களை படிக்கும் பழக்கும் குறைந்து வருகிறது. செய்திகளை தொலைக்காட்சிகளில் பார்க்கும் வழக்கமும் அருகி வருகிறது. அவசர, அவசரமான வாழ்வில் தங்களுக்கு தேவையான செய்திகளை மக்கள் விரைவாக, பார்த்த நொடிகளிலேயே தெரிந்துகொள்ள விரும்புகிறார்கள். அதற்காக ஏபிபி நாடு முக்கியமான செய்திகளை மட்டும் தொகுத்து தலைப்புச் செய்திகளாக ஒரு சில வரிகளில் தருகிறது. இன்றைக்கு இதை மட்டும் நீங்கள் படித்தால் மட்டும் நாட்டில் நடக்கும் முக்கிய நிகழ்வுகள் உங்கள் கவனத்தில் இருந்து விலகாது.

முதலமைச்சர் விஜயின் எலும்பை உடைக்கப்படும்

ஜனநாயகன் படம் பார்த்தவர்களுக்கு இயக்குநர் எச் வினோத் கோரிக்கை

முதல்வர் விஜயின் ஜனநாயகன் திரைப்படம் வரும் ஜூலை 23 ஆம் தேதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. படம் வெளியாக இன்னும் ஒரு சில நாட்களே உள்ள நிலையில் படத்தின் இயக்குநர் எச் வினோத் யூடியுப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் ஜனநாயகன் படத்துடன் தொடர்புடைய சர்ச்சை குறித்து அவர் பேசியுள்ளார். அதே நேரம் ரசிகர்களுக்கு ஒரு முக்கியமான கோரிக்கையும் எச் வினோத் வைத்துள்ளார்.

டெல்லியை அதிர வைத்த கரப்பான் பூச்சி போராட்டம்

மழைக்கால கூட்டத்தொடருக்காக மக்களவை இன்று தொடங்கியுள்ள நிலையில், நாட்டின் தலைநகரான டெல்லியில் நடைபெற்று வரும் போராட்டம் அனைவரையும் திரும்பிபார்க்கவைத்துள்ளது. அந்த வகையில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி சார்பில் டெல்லியில் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. பாராளுமன்றத்திற்குச் செல்வோம் ( சலோ சன்சத்) என்ற பேரணியை நடத்தி வருகின்றனர்.

திமுக எம்.எல்.ஏ., கைது

முதலமைச்சர் விஜய்க்கு மிரட்டல் விடுக்கும் வகையில் பேசிய விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி திமுக எம்.எல்.ஏ., மார்கண்டேயனை போலீசார் கைது செய்துள்ளனர்.கோவில்பட்டியில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய அவரது உரை சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதிகாலையே அவரை கைது செய்ய போலீசார் வீட்டிற்கு வந்ததை அறிந்து, திமுகவினர் எம்.எல்.ஏவின் வீட்ட்டின் முன்பு குவிந்து, காவல்துறைக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினார். அராஜகபோக்கை கைவிட வேண்டும் எனவும் வலியுறுத்தினார். இருப்பினும் கைது செய்யப்பட்ட மார்கண்டேயன் மாவட்ட எஸ்பி அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

திரிபுரா மாநிலத்தின் டிஜிபி அனுராக் தன்கர் தற்கொலை

ஒரு மாநிலத்தின் போலீஸ் படையின் தலைவராக Head of the Police Force ஆக இருக்கும் திரிபுரா மாநிலத்தின் டிஜிபி அனுராக் தன்கர் தன்னுடைய அலுவலகத்திலேயே தற்கொலை செய்துகொண்டுள்ளார். இது பாஜக ஆளும் அந்த திரிபுரா மாநிலத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. மக்களை காக்க வேண்டிய காவல்துறையின் உச்சப்பட்ச தலைவராக இருக்கும் ஒருவரே தன்னுடைய பணியின்போது தற்கொலை செய்துகொண்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

போராட்டக்காரர்கள் மீது தடியடி

மருத்துவக் படிப்பிற்கான தேசிய நுழைவுத் தேர்வான நீட் தேர்வில் நடந்ததாகக் கூறப்படும் முறைகேடுகளைக் கண்டித்தும், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரியும் காக்ரோச் ஜனதா கட்சி ஆதரவாளர்கள்பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாகமழைக்கால கூட்டத்தொடரின் முதல் நாளன இன்று, ஜந்தர் மந்தரில் இருந்து நாடாளுமன்றதை நோக்கி பேரணி செல்ல முயன்றனர். இதில் ஏராளமான இளைஞர்கள் பங்கேற்றனர். ஆனால் அவர்கள் உரிய அனுமதி பெறவில்லை என காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டனர். தடுப்புகளையும் தாண்டி பேரணியில் ஈடுபட முயன்றவர்கள் மீது, கண்மூடித்தனமாக தடியடி நடத்தப்பட்டுள்ளது.

முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம்

திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், “ ஜனநாயகப் பண்புகள் அறவே இன்றிச் செயல்படும் த.வெ.க. ஆட்சியில், விளாத்திக்குளம் எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் அவர்கள் கைது செய்யப்பட்டிருப்பதற்குக் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஆட்சியில் நடைபெறும் தவறுகளையும் அவலங்களையும் சுட்டிக்காட்டும் தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், இணைய ஆதரவாளர்கள் என அனைவரையும் தொடர்ந்து வேட்டையாடி வருகிறது Take Diversion Model த.வெ.க. அரசு. "அவதூறு வழக்குகளில் கூட எதற்குத் தொடர்பில்லாத குற்றப்பிரிவுகளைச் சேர்க்கிறீர்கள்?" என நீதிமன்றத்திடம் சமீபத்தில்தானே குட்டு வாங்கினீர்கள்? கைது செய்யப்பட்டுள்ள சட்டமன்ற உறுப்பினர் தனது வழக்கறிஞர் மற்றும் ஆதரவாளர்களைச் சந்திக்கக் கூட மறுக்கப்பட்டுள்ளார். அவருக்கான மருந்துகளை வழங்கச் சென்றவர்களும் தடுக்கப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவரின் அடிப்படைச் சட்ட உரிமைகளும் மனித உரிமைகளும்கூட மறுக்கப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டில் நடைபெறுவது சட்டத்தின் ஆட்சியா, சாத்தானின் ஆட்சியா? மைதானத்தில் மாத்திரை அரைத்த அமைச்சர் மீதும், சொந்தக் கட்சி பெண் உறுப்பினரின் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்குமே நடவடிக்கை எடுக்க வக்கற்ற த.வெ.க. அரசு அரசியல் விமர்சனங்களுக்கு மட்டும் அலறித் துடித்துக் கைது செய்வது ஏன்? ஆட்சியாளர்களின் சட்டத்துக்குப் புறம்பான உத்தரவுகளை எல்லாம் நிறைவேற்றி அவர்களின் மனதைக் குளிர்விப்பது காவல்துறையினரின் பணி அல்ல! சட்டப்படியும் மனசாட்சிப்படியும் செயல்படுங்கள். இல்லாவிட்டால், there will be consequences” என ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மதுரை: புலிப்பட்டி கிராமத்தில் வசிக்கும் 125 பட்டியலின மக்கள்

மதுரை மாவட்டம் மேலூர் தாலுகாவிற்கு உட்பட்ட புலிப்பட்டி கிராமத்தில் வசிக்கும் 125 பட்டியலின மக்களுக்கு கடந்த 2010-ஆம் ஆண்டு இலவச வீட்டுமனை பட்டாக்கள் வழங்கப்பட்டன. ஆனால் அனுமந்த பட்டாகளுக்கான நிலத்தை அளவீடு செய்யாமல் கடந்த 16 ஆண்டுகளாக பல்வேறு காரணங்களை கூறி கால தாமதித்து வருகின்றனர். இதன் காரணமாக அரசு சார்பில் வழங்கப்பட்ட பட்டா இருந்தும், தங்களுக்கான நிலத்தை அடையாளம் காணவோ, வீடுகட்டவோ முடியாமல் 125 பட்டியலின மக்கள் பல ஆண்டுகளாக அரசு அதிகாரிகள், மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை. இந்நிலையில் புலிப்பட்டி கிராமத்தை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட பட்டியலின மக்கள் தங்களுக்கான அனுமந்த பட்டாக்களுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

தலைப்பு செய்திகள்

ஃபோட்டோ கேலரி