Toxic Review: டாக்ஸிக் டிசஸ்டரா? கையெடுத்து கும்பிட்டு ஓடிய ரசிகர்கள்.. ஸ்பெஷல் ஷோ பப்ளிக் ரிவ்யூ
சென்னை: கீது மோகன்தாஸ் இயக்கத்தில் யாஷ் நடித்த டாக்ஸிக் திரைப்படம் இன்று தியேட்டரில் வெளியாகி உள்ளது. நயன்தாரா, கியாரா அத்வானி, ருக்மிணி வசந்த், ஹுமா குரேஷி, தாரா சுதாரியா என பலர் நடத்து இருக்கும் இப்படம், கன்னடம் மற்றும் ஆங்கிலத்தில் ஒரே நேரத்தில் தயாரிக்கப்பட்டு, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி ஆகிய முக்கிய மொழிகளில் இன்று தியேட்டரில் வெளியாகி உள்ளது.
ஆந்திரா மற்றும் கர்நாடகாவில் அரசு சிறப்பு காட்சிக்கு அனுமதியின்படி காலை 6 மணிக்கு படம் திரையிடப்பட்டது. அதே போல, பெங்களூர் திரையரங்குகளில் அதிக அளவில் ரசிகர்கள் குவிந்ததால், அதிகாலை 5:45 மணிக்கே சில திரையரங்குகளில் படம் திரையிடப்பட்டது. சிறப்பு காட்சியை பார்த்த ரசிகர்கள் படம் குறித்து தங்கள் கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.
டாக்ஸிக் டிசஸ்டரா: யாஷின் தீவிர ரசிகரான ஒருவர், படத்தை பார்த்துவிட்டு கையெடுத்து கும்பிட்டபடி வெளியே வந்தார். அங்கிருந்த பத்திரிக்கையாளர்கள் படம் எப்படி இருக்கு என கேட்க, அவர் வாயை திறக்காமல், முகத்தை சோகமாக வைத்துக்கொண்டு, எதுவும் சொல்வதற்கு இல்லை. டாக்ஸிக் டிசஸ்டர் என வருத்தத்தோடு கூறினார். மற்றொரு ரசிகர் படம் பிளாப், ஊத்திக்கிச்சி என சொல்லாமல் சொன்னார்.
படம் சூப்பர்: ஆனால், டாக்ஸிக் கன்னட பதிப்பை பார்த்துவிட்டு வந்த ரசிகர் ஒருவர், முதலில் கன்னட திரையுலகத்திற்கும், ஒட்டுமொத்த சினிமா துறைக்கும் என்னுடைய வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன். அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள். இந்த படம் நன்றாக இல்லை, அந்த காட்சி நன்றாக இல்லை என்று பலரும் பேசினார்கள். ஆனால், இப்போது நான் படத்தை பார்த்துவிட்டு அனைவரிடமும் ஒன்றை சொல்கிறேன். யார் என்ன நெகட்டிவ் விமர்சனங்களை வைத்தாலும் இந்த படம் 100 நாள் 200 நாள் ஓடும், நிச்சயமாக நல்ல வசூலை அள்ளும். 100 சதவீதம் படம் நன்றாக இருக்கிறது. படத்தைப் பற்றி வரு நெட்டிவ் விமர்சனத்தை பொருட்படுத்தாமல், படத்தை படத்தை பாருங்க படம் மிகவும் சிறப்பாக இருக்கிறது "Next Level" என்றும் அந்த நபர் பேசி உள்ளார். ஆனால் இணையத்தில் படத்தின் பெயரை சொல்லாமலே 'டாக்ஸிக் டிசஸ்டரா' ஒரு வீடியோவை பரப்பி வருகின்றனர்.