📅 Thursday, 27 August 2026 IST | ஆவணி 11, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
World News August 27, 2026 03:03 AM

4 இந்திய நிறுவனங்கள் மீது அமெரிக்கா தடை

4 இந்திய நிறுவனங்கள் மீது அமெரிக்கா தடை

வாஷிங்டன், ஆக.26-

ஈரான் நாட்டின் பெட்ரோலிய மற்றும் பெட்ரோ கெமிக்கல் பொருட்கள் வர்த்தகத்தில் ஈடுபட்டதாகக் கூறி, இந்தியாவைச் சேர்ந்த 4 நிறுவனங்கள் மற்றும் 3 இந்தியர்கள் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது.

ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் பொருளாதார அழுத்தத்தை தீவிரப்படுத்தும் “Operation Economic Outcast” நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்தத் தடைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஈரானின் ராணுவ நடவடிக்கைகள், கொள்முதல் வலையமைப்புகள், சைபர் செயல்பாடுகள் மற்றும் பெட்ரோலிய வர்த்தகத்தை குறிவைத்து அமெரிக்கா இந்த நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது.

தடைக்கு உள்ளான இந்திய நிறுவனங்கள் Portease Partners LLP, Sadashiva Overseas Limited, PP Softtech Private Limited மற்றும் Prakrutees Infra Impex India Private Limited ஆகும்.

Portease Partners நிறுவனம் ஈரானில் இருந்து இந்தியாவுக்கு பெட்ரோ கெமிக்கல் பொருட்களை இறக்குமதி செய்ய உதவியதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. அந்த நிறுவனத்தின் பங்குதாரர்களான ஹரிஷ் ராமச்சந்திர ரங்கி மற்றும் இந்திரிஸ்மியா அஷரப்மியா ஷேக் ஆகியோரும் தடைப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர். PP Softtech நிறுவனத்தின் இயக்குநராகக் குறிப்பிடப்பட்ட பிரசாந்த் கார்க் மீதும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Sadashiva Overseas நிறுவனம் 2024 பிப்ரவரி முதல் 2025 ஜூன் வரை சுமார் 69 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான ஈரான் பெட்ரோலியப் பொருட்களை இறக்குமதி செய்ததாக அமெரிக்கா கூறியுள்ளது. PP Softtech சுமார் 25 மில்லியன் டாலர், Prakrutees Infra சுமார் 25 மில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்களை இறக்குமதி செய்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரான் எண்ணெய் மற்றும் பெட்ரோ கெமிக்கல் வர்த்தகத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படும் சுமார் 60 நிறுவனங்கள், தனிநபர்கள் மற்றும் கப்பல்கள் மீது அமெரிக்கா சமீபத்திய நடவடிக்கையில் தடை விதித்துள்ளது.