📅 Monday, 17 August 2026 IST | ஆவணி 1, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics June 13, 2026 04:30 PM

தவெகவுக்கு தாவிய விஜயதரணி காங். டூ பாஜக டூ TVK

தவெகவுக்கு தாவிய விஜயதரணி காங். டூ பாஜக டூ TVK

தவெகவுக்கு தாவிய விஜயதரணி; காங். டூ பாஜக டூ TVK- காய் நகர்த்திய காரணம்!

காங்கிரஸ் கட்சியில் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக, விளவங்கோடு எம்எல்ஏவாக இருந்தபோதே விஜயதரணி 2024 பிப்ரவரியில் பாஜகவில் இணைந்தார்.

காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏவும் பாஜக உறுப்பினருமான விஜயதரணி, தவெகவில் இன்று (ஜூன் 13) இணைய உள்ளார். இதற்காக தனது ஆதரவாளர்களுடன் பனையூர் அலுவலகத்துக்கு படையெடுத்துள்ளார். அமைச்சரும் தவெக பொதுச் செயலாளருமான ஆனந்த் முன்னிலையில் இந்த இணைப்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக 3 முறை காங்கிரஸ் எம்எல்ஏவாகவும் மகளிர் காங்கிரஸ் பொதுச் செயலாளராகவும் இருந்தவர் விஜயதரணி. குறிப்பாக கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு தொகுதியில் கடந்த 2011, 2016 மற்றும் 2021 ஆகிய ஆண்டுகளில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் நின்று வெற்றி பெற்றிருந்தார் விஜயதரணி. சட்டமன்ற கொறடாவாகவும் இருந்துள்ளார்.

இதையும் வாசிக்கலாம்: Minister Raj mohan: பள்ளிகளில் சாதி, மத அடையாளங்களுக்கு நோ; தனியார் பள்ளி கல்விக்கட்டணம்- அமைச்சர் ராஜ்மோகன் பேட்டி

தொடர்ந்து ஒரே தொகுதியில் செல்வாக்குடன் இருந்த இவர், தனக்கு காங்கிரஸ் கட்சியின் தமிழகத் தலைவர் பதவி கிடைக்கும் என்று எதிர்பார்த்து காத்திருந்தார். ஆனால் காங்கிரஸ் கட்சியின் சட்டமன்றக் குழுத் தலைவராக இருந்த செல்வப்பெருந்தகையை தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவராக நியமித்தார் மல்லிகார்ஜூன கார்கே. குறைந்தபட்சம் செல்வப்பெருந்தகை இருந்த சட்டமன்ற குழு தலைவர் பதவியாவது கிடைக்கும் என்று எதிர்பார்ப்பில் இருந்த விஜயதரணியின் அந்த ஆசையும் நிறைவேறாமல் போனது.

இந்த அதிருப்தி காரணமாக, விளவங்கோடு எம்எல்ஏவாக இருந்தபோதே 2024 பிப்ரவரியில் பாஜகவில் இணைந்தார். சிட்டிங் எம்எல்ஏவான அவருக்கு மிகப்பெரிய பொறுப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

பாஜகவில் ஓரங்கட்டப்பட்ட விஜயதரணி

எனினும் இரண்டு ஆண்டுகளாக அவருக்கு கட்சியில் எந்த முக்கியத்துவமும் அளிக்கப்படவில்லை. செய்தியாளர் சந்திப்பில் இதுதொடர்பான கேள்விகளை சாதுர்யமாக சமாளித்து வந்தார் விஜயதரணி.

2024 நாடாளுமன்றத் தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட அவருக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை, தொடர்ந்து 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக சார்பில் விளவங்கோடு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டது. எனினும் காங்கிரஸ் வேட்பாளர் பிரவீனிடம் தோல்வியைத் தழுவினர் விஜயதரணி.

பாஜக மீது அதிருப்தியில் இருந்த அவர் தற்போது ஆளும் கட்சியான தவெகவில் இன்று இணைகிறார். அவருடன் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் பச்சைமால், முன்னாள் எம்.பி.க்கள் பால கங்கா, வனரோஜா, இளவரசன் மற்றும் பல்வேறு அ.தி.மு.க., அ.ம.மு.க. நிர்வாகிகள் என பல தரப்பினரும் இணைய உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

விஜயதரணி பாஜகவில் இணைந்த அதே சமயத்தில்தான் தவெக என்னும் கட்சியே உருவாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards. She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

தலைப்பு செய்திகள்

ஃபோட்டோ கேலரி