TVK Minister: மொபைல் கடை உரிமையாளர் டு போக்குவரத்துத்துறை அமைச்சர்!
TVK Minister: மொபைல் கடை உரிமையாளர் டு போக்குவரத்துத்துறை அமைச்சர்! - யார் இந்த தமிழன் பார்த்திபன்?
சேலம் மாவட்டத்தில் விஜய் ரசிகர் மன்றத்தின் முக்கிய நிர்வாகியாக நீண்ட காலம் செயல்பட்டு வந்த இவர், த.வெ.க - வின் சேலம் மத்திய மாவட்டச் செயலாளராக பதவி வகித்து வருகிறார்.
சேலம் மாவட்டம் தெற்கு சட்டமன்றத் தொகுதியில் த.வெ.க வேட்பாளராக களமிறங்கிய விஜய் தமிழன் பார்த்திபன் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர். விஜய் தலைமையிலான தமிழ்நாடு அரசின் அமைச்சரவையில் போக்குவரத்துத் துறை அமைச்சராக பதவியேற்றிருக்கிறார்.
யார் இந்த விஜய் தமிழன் பார்த்திபன்?
சேலம் மாவட்டம் அம்மாப்பேட்டையைச் சேர்ந்தவர் தமிழின் பார்த்திபன். 12 - ம் வகுப்பு வரை படித்துள்ள இவர், சேலத்தில் சாதாரணமாக செல்போன் கடை ஒன்றை தொடங்கி நடத்த ஆரம்பித்திருக்கிறார். விஜயின் தீவிர ரசிகரான இவர் கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கும் மேலாக விஜயுடன் பயணித்து வருகிறார்.