📅 Thursday, 10 September 2026 IST | ஆவணி 25, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics September 10, 2026 02:34 PM

Udhayanidhi : மீண்டும் கொடூர கொலை.! சிஎம் விஜய்யை போலீசார் DUMMY CM ஆக நினைக்கிறார்களா? அடித்து

Udhayanidhi : மீண்டும் கொடூர கொலை.! சிஎம் விஜய்யை போலீசார் DUMMY CM ஆக நினைக்கிறார்களா? அடித்து

Udhayanidhi : மீண்டும் கொடூர கொலை.! சிஎம் விஜய்யை போலீசார் DUMMY CM ஆக நினைக்கிறார்களா? அடித்து ஆடும் உதயநிதி

சட்டமன்றத்தில் சட்டம் ஒழுங்கு குறித்து கேள்வி கேட்டால், ‘1974-இல் என்ன நடந்து தெரியுமா,, ED என்ன பண்ணுச்சு தெரியுமா’ என்று Divert செய்யும் முதலமைச்சர், இந்த கொலைக்கு முதலமைச்சர் விஜய் என்ன பதில் வைத்திருக்கிறார் என உதயநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழகத்தில் தொடரும் கொலை சம்பவங்கள்

தமிழகத்தில் தொடர்ந்து கொலை சம்பவங்கள் அரங்கேறி வருவதாக அரசியல் கட்சிகள் கடுமையாக விமர்சித்து வரும் நிலையில், நேற்று இரவு இளைஞர் ஒருவர் சென்னையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக எதிர்கட்சி தலைவரும், திமுக இளைஞர் அணி செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தலைநகர் சென்னையில் மீண்டும் ஒரு கொடூர கொலை அரங்கேறி இருப்பது கடும் அதிர்ச்சி அளிக்கிறது.‘கடன் தொல்லை கொடுக்கிறார்கள்’ என பாதுகாப்பு கேட்ட பிரதீப்ராஜ் எனும் இளைஞரை, ‘உயிரோடு இருக்க மாட்ட.. பொய் Case போட்டு உள்ள தள்ளுவேன்’ என்று திருவொற்றியூர் காவல் ஆய்வாளர் மிரட்டியதாக சம்பந்தப்பட்ட இளைஞரே நேற்று முன் தினம் வீடியோ வெளியிட்ட நிலையில், நேற்று அவர் கொலை செய்யப்பட்டு இருக்கிறார்.

கொலைக்கு என்ன பதில் வைத்திருக்கிறார் CM

‘CM-ட்ட வேணும்னா போய் சொல்லு. என்னைய ஒன்னும் பண்ண முடியாது’ என்று திருவொற்றியூர் காவல் ஆய்வாளர் சொன்னதாகவும் கொலையாவதற்கு ஒரு நாள் முன்பு பிரதீப்ராஜ் கூறியுள்ளார்.காவல்துறைக்கு பொறுப்பு வகிக்கும் முதல்வரை காவல்துறையினரே DUMMY CM ஆக நினைக்கிறார்களா? காவல்துறையிடம் பாதுகாப்பு கேட்டால் கொலை செய்யப்படுவார்கள் என்ற புதிய வரலாற்றை இந்த Circus ஆட்சியாளர்கள் உருவாக்கி இருக்கிறார்கள். சட்டமன்றத்தில் சட்டம் ஒழுங்கு குறித்து கேள்வி கேட்டால், ‘1974-இல் என்ன நடந்து தெரியுமா,, ED என்ன பண்ணுச்சு தெரியுமா’ என்று Divert செய்யும் முதலமைச்சர், இந்த கொலைக்கு என்ன பதில் வைத்திருக்கிறார்.

இந்த வழக்கில் திருவொற்றியூர் காவல் ஆய்வாளர் உட்பட சம்பந்தப்பட்ட அனைவர் மீதும் வழக்குப்பதிவு செய்வதோடு, சட்டத்தின் முன் நிறுத்தி உரிய தண்டனை பெற்றுத்தர வேண்டும். தலைநகரில் மீண்டும் ஒரு கொலை நடக்காமல் இருப்பதற்கு தேவையான கடுமையான நடவடிக்கையை இந்த அரசு எடுக்க வேண்டும் என உதயநிதி அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

தலைப்பு செய்திகள்

ஃபோட்டோ கேலரி