உலகக்கோப்பை கால்பந்து வெற்றி கொண்டாட்டத்தில் துயரம்: ஸ்பெயினில் சிறுவன் பலி; 2 பேர் காயம்
உலகக்கோப்பை கால்பந்து வெற்றி கொண்டாட்டத்தின்போது, ஸ்பெயினில் நீரூற்றின் ஒரு பகுதி திடீரென சரிந்து சிறுவன் பலியானான்.
இறுதிப்போட்டி
இதனை பயன்படுத்தி கொண்ட ஸ்பெயின் வீரர் பெரன் டாரஸ், கூடுதலாக வழங்கப்பட்ட நேரத்தில் (106-வது நிமிடம்) கோல் அடித்தது அணி வெற்றி பெறுவதற்கு ஏதுவானது. அதன்பின்னர் இரு அணிகளுக்கும், கோல் அடிக்கும் முயற்சி பலன் தரவில்லை.
ஸ்பெயின் வெற்றி
இதனால், அர்ஜென்டினாவை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி உலகக்கோப்பையை ஸ்பெயின் வென்றது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப்பும், பிபா தலைவர் கியானி இன்பான்டினோவும் சேர்ந்து பிபா உலகக்கோப்பையை ஸ்பெயின் அணியிடம் வழங்கினர்.
இதனை அடுத்து, ஸ்பெயின் அணியின் இந்த வெற்றியை அந்நாட்டின் பல்வேறு நகரங்களிலும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இதில், போர்ச்சுகல் நாட்டை ஒட்டி அமைந்த சலமான்கா மாகாணத்தில் மேற்கு நகரான சியூடேட் ரோட்ரிகோவில் நள்ளிரவுக்கு பின்னர் வெற்றி கொண்டாட்டத்தில் ரசிகர்கள் ஈடுபட்டு இருந்தனர்.
அப்போது, நீரூற்றின் ஒரு பகுதி திடீரென சரிந்து விழுந்தது. அதில் சிக்கி 13 வயது சிறுவன் பலத்த காயமடைந்து, சிகிச்சை பலனின்றி பலியானான். தவிர, 2 பேர் காயமடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
2010-ம் ஆண்டுக்கு பின்னர் 16 ஆண்டுகள் கழித்து 2-வது முறையாக ஸ்பெயின் அணி கோப்பையை வெற்றி பெற்றதற்காக நாடு முழுவதும் கொண்டாட்டங்கள் நடந்து வரும் சூழலில் நடந்த இந்த துயர சம்பவம், பெரும் சோகம் ஏற்படுத்தியுள்ளது.