📅 Monday, 10 August 2026 IST | ஆடி 25, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema August 10, 2026 05:02 PM

Unidentified (2026) - சவுதி அரேபியன் மூவி / தமிழ்

Unidentified (2026) - சவுதி அரேபியன் மூவி / தமிழ்

19/6/2026 முதல் அமெரிக்காவில் ரிலீஸ் ஆன இந்தப் படம் இப்போது 7/8/2026 முதல் தமிழ் டப்பிங்கில் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் காணக்கிடைக்கிறது. டொராண்ட்டோ இன்டர்நேஷனல் பிலிம் பெஸ்டிவலில் 5/9/2025-ல் திரையிடப்பட்டு பலரது பாராட்டுதல்களை பெற்ற படம் இது.

ஸ்பாய்லர் அலெர்ட் :

கதை நடக்கும் இடம் சவுதி அரேபியா.

நாயகி கணவனை விட்டுப் பிரிந்து தனியாக வாழ்பவள். கணவன் வேறு ஒரு பெண்ணைத் திருமணம் செய்ய இருக்கிறான் என்பது தெரிந்ததும் பிரிந்து வந்துவிட்டாள். போலீஸ் வேலைக்காக படிக்கும் நாயகி, இப்போது 'பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ்' ஆக வேலை செய்கிறாள். அதாவது போலீஸ் ஸ்டேஷனில் டாக்குமென்ட்களை எல்லாம் டைப் செய்து சிஸ்டத்தில் ஏற்றும் வேலை, பிரிண்ட் எடுக்கும் வேலை எல்லாம் செய்பவள். கேஸைத் துப்பறிவதில் போலீசுக்கு உதவியாக அவ்வப்போது இருப்பாள்.

பாலைவனத்தில் ஒரு இளம்பெண்ணின் பிணம் கிடைக்கிறது. பிணத்தின் உடலில் இருக்கும் உடைகளைப் பார்த்தால் நல்ல செல்வந்தர் குடும்பத்தில் பிறந்தவளாக இருக்கலாம். வேறு எந்தத் தடயமும் கிடைக்கவில்லை.

நாயகி பணிபுரியும் போலீஸ் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டர், இந்த கேஸில் நாயகியைக் கூட இருந்து உதவுமாறு கேட்டுக்கொள்கிறார்.

இந்தக் கேசை நாயகி எப்படி டீல் செய்தாள் என்பது மீதி திரைக்கதை.

நாயகியாக மிலா ஐ. ஜஹ்ராணி கச்சிதமாக நடித்திருக்கிறார்.

இறந்த பெண் அமலின் சகோதரி ஜூட்டாக நடித்த பள்ளி மாணவி கொள்ளை அழகு.

இன்ஸ்பெக்டராக வருபவர், நாயகியின் கணவராக வருபவர், இறந்த பெண் அமலின் முறைமாமனாக வருபவர் ஆகிய மூவர் நடிப்பும் கச்சிதம்.

சாம் தாம்சன், அமேலியா வார்னர் இருவரும் இணைந்து இசையமைத்திருக்கிறார்கள். பின்னணி இசை குட்.

மோண்ட்டி ரோவனின் ஒளிப்பதிவு, நாம் அதிகம் பார்க்காத சவுதி அரேபியாவின் அழகைக் காட்டுகிறது.

ரபேல் நூர் + ஸ்டீவ் கோஹென் எடிட்டிங்கில் படம் 99 நிமிடங்கள் ஓடுகிறது.

பிரட் நிமன் என்பவருடன் இணைந்து திரைக்கதை எழுதி, தனியாக இயக்கியிருக்கிறார் ஹைபா ஐ. மன்சூர்.

சபாஷ் டைரக்டர் :

இறந்து கிடந்த பெண்ணுக்கு ஒரு சகோதரி இருப்பதை நாயகி கண்டுபிடிப்பது, அவளின் குடும்பத்தாரையும் கண்டுபிடிப்பது வித்தியாசமான கோணத்தில் காட்டியது.

மெயின் கதைக்கு் சம்பந்தமில்லாமல் நாயகியின் டைவர்ஸ் மேட்டர், நாயகியின் சகோதரன் சமாதானப்படுத்துவது, நாயகிக்கு குழந்தை பாக்கியம் இல்லாததால்தான் கணவன் பிரிகிறான் போன்ற விஷயங்களை எல்லாம் கதையோடு தொடர்புபடுத்திய விதம் பிரில்லியன்ட்.

இறந்து கிடந்த பெண்ணின் போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படவில்லை என்பதும், ஹிட் அண்ட் ரன் கேசாக இருக்கலாம் என்பது தெரிய வருவதும் ஒரு திருப்பம்.

இறந்து கிடந்த பெண்ணின் சகோதரியோ, அம்மாவோ அந்த நிகழ்வு பற்றி எந்தக் கவலையையும் படாமல் இருப்பதை நாயகி ட்ராக் பண்ணுவது குட்.

இறந்து கிடந்த பெண் அமல், சகோதரி ஜூட் - இருவருக்கும் அமலின் காதலன் முறைமாமன் தான் என்பது தெரிய வருவதும், திடீரென அவன் குற்றத்தை ஒப்புக்கொள்வதும் ட்விஸ்ட்.

அமலின் காதலன் நோவாதான், அமல் வேறு ஒருவனைத் திருமணம் செய்ய சம்மதித்ததால் அவளைக் கொலை செய்திருக்க வேண்டும் என அமலின் சகோதரி ஜூட் கொடுக்கும் ஸ்டேட்மென்ட் அதிர்ச்சி.

கொலையாளி யார்? என்ற கிளைமாக்ஸ் ட்விஸ்ட் அபாரம்.

லாஜிக் மிஸ்டேக்ஸ் :

1 நாயகிக்கு அறிமுகமில்லாத புது நெம்பரிலிருந்து அவ்வப்போது சில வீடியோக்கள் வருவது கேஸ் விசாரணைக்கு உதவுவது ஓக்கே,ஆனால் இன்ஸ்பெக்டர் அந்த போன் நெம்பரை ஆரம்பத்திலேயே ட்ராக் பண்ண முயற்சிக்கவே இல்லையே?அது ஏன் ?

2 போலீஸ் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டராக பணியாற்றவர் ஒரு ஹெல்ப்பராக இருக்கும் நாயகியைக்காரின் பின் சீட்டில் அமர வைத்து அழைத்துப்போவது ஏன்?

3 இறந்த பெண் அமலின் சகோதரி ஜூட்டுக்கு அமல் தன் முறை மாமனைக்காதலிப்பது தெரியாது என்பது எப்படி? சொந்த மாமா மகனை லவ் பண்ணுவது தெரியாமல் போகுமா?

4 காதலித்த மாமா மகனை விட்டு விட்டு வேறு ஒரு ஆளுக்கு இரண்டாம் தாரமாக ஒத்துக்கொள்வது ஏன்?என்பதை அமல் தரப்பிலிருந்து சரியான விளக்கம் இல்லை.

5 கேஸ் முடிஞ்சிடுச்சு.இந்த அமல் பற்றிய பைலை நீயே வெச்சுக்கோ என இன்ஸ்பெக்டர் நாயகியிடம் தருவது எப்படி ?போலீஸ் ரெக்கார்டுக்கு அது வேண்டாமா?

6 புருசன் இரண்டாம் தாரமாக மனைவியின் சம்மதம் இல்லாமல் திருமணம் செய்ய முன்வரும்போது கொல்ல வேண்டியது புருசனையா?இரண்டாம் தாரமாக வரும் சக்களத்தியையா?

அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங். 16+

கல்கி கமெண்ட் - சவுதி அரேபியா பின்னணியில் வந்திருக்கும் க்ரைம் திரில்லர் என்பதாலும், க்ளைமாக்ஸ் ட்விஸ்ட்டுக்காகவும் பார்க்கலாம்.

ரேட்டிங்க் 2.5 /5