📅 Wednesday, 05 August 2026 IST | ஆடி 20, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema August 05, 2026 03:31 PM

உடையை மாற்றிய முதல்வர் விஜய் - சட்டமன்றத்திற்கு பேண்ட்

உடையை மாற்றிய முதல்வர் விஜய் - சட்டமன்றத்திற்கு பேண்ட்

2026-27 நிதியாண்டிற்கான தமிழக நிதி நிலை அறிக்கை இன்று தமிழக முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் தலைமையில் புதிதாக அமைக்கப்பட்ட அரசாங்கத்தின் கீழ், நிதித்துறை அமைச்சர் என். மரிய வில்சனால் சமர்ப்பிக்கப்பட்டது.

காலை 10 மணிக்கு நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்த அமைச்சர் மரிய வில்சன், தனக்கு அனைத்தும் கொடுத்த தமிழக மக்களுக்கு நன்றி கடன் செலுத்துவதற்காகவே முதலமைச்சர் விஜய் அரசியலுக்கு வந்துள்ளார் என கூறினார்.

மேலும் அமைச்சர் மரிய வில்சன், பிறப்பின் அடிப்படையில் அனைவரும் சமம், ஆனால் செய்யும் செயலில் தான் அவர்களின் சிறப்பு இயல்புகள் வேறுபடுகின்றன எனவும் தெரிவித்தார்.

நேரம் தவறாமையை கடைபிடிக்கும் முதலமைச்சர் விஜய், இன்றும் நிதி நிலை அறிக்கையை ஒட்டி, காலை 10 மணிக்கு முன்பே சட்டமன்றத்திற்கு வருகை தந்தார்.

மேலும் தான் வழக்கமாக சட்டமன்றத்திற்கு அணிந்து வரும் கருப்பு பிளேஸர், கோட்-சூட்டுக்கு பதிலாக பேண்ட்-ஷர்ட் அணிந்து காணப்பட்டார். சில்வர் ப்ளூ நிற ஷர்ட் அணிந்து எளிமையாக இருந்தார்.

இதைத்தொடர்ந்து அவையில் இருந்த சபாநாயகர் மற்றும் ஆனைத்து கட்சி எம்.எல்.ஏ.க்களுக்கும் அவர் வணக்கத்தை தெரிவித்தார்.

அப்போது அமைச்சர்களும் முதலமைச்சருக்கு எழுந்து நின்று வணக்கம் வைத்து, மரியாதை செலுத்தினர்.