📅 Sunday, 04 October 2026 IST | புரட்டாசி 18, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics July 15, 2026 10:34 PM

வாக்காளர்களுக்கு பிரிட்ஜ் கூப்பன்

வாக்காளர்களுக்கு பிரிட்ஜ் கூப்பன்

நடந்த முடிந்த தமிழக சட்டசபை தேர்தலில் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தொகுதியில் அதிமுக வேட்பாளராக போட்டியிட்ட சி.விஜயபாஸ்கர், 1,05,773 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவர் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட தவெக வேட்பாளர் முருகேசனை விட 62,073 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தார்.

இதனையடுத்து சி.விஜயபாஸ்கர் வெற்றி பெற்றதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் திமுக சார்பில் போட்டியிட்டு தோல்வியுற்ற கே.கே.செல்லப்பாண்டியன் தேர்தல் வழக்கு தொடர்ந்தார். அதில், வெற்றி பெற்ற சி.விஜயபாஸ்கர் தேர்தல் பிரச்சாரத்தின்போது வாக்காளர்கள் தனக்கு ஆதரவாக வாக்களிக்க கூறி ரூ.10,000 மற்றும் ரூ.2,000-க்கான கூப்பன்களை விநியோகித்தார். வாக்காளர்கள் ப்ரிட்ஜ் வாங்க கூப்பன்களை விநியோகித்து தேர்தல் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளார். எனவே சி.விஜயபாஸ்கர் வெற்றியை செல்லாது என அறிவிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டிருந்தார்.

இந்த வழக்கு இன்று நீதிபதி என் செந்தில்குமார் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கு விசாரணைக்கு ஏற்றுக்கொண்டு கூப்பன்களை வழங்கி முறைகேட்டில் ஈடுபட்டதை மனுதாரர் சுட்டிக்காட்டி பதிவு செய்தார். மேலும் வழக்கு குறித்து சி.விஜயபாஸ்கர் மற்றும் தேர்தல் ஆணையம் பதிலளிக்குமாறு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை மூன்று வாரத்திற்கு தள்ளி வைத்தார்.

தற்பொழுது சி.விஜயபாஸ்கர் தன்னுடைய எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்து விட்டு தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.