வார தொடக்க முதல்நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.640 அதிகரிப்பு
சென்னை: சென்னையில் வார தொடக்க முதல் நாளான இன்று (ஆகஸ்ட் 24) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 640 ரூபாய் அதிகரித்து ஒரு லட்சத்து 20 ஆயிரத்து 240 ரூபாய்க்கும், கிராமுக்கு 80 ரூபாய் அதிகரித்து 15,030 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
சர்வதேச அளவில் ஏற்படும் மாற்றம் காரணமாக தமிழகத்திலும் ஆபரண தங்கத்தின் விலை மாற்றம் கண்டு வருகிறது. தமிழகத்தில் கடந்த சனிக்கிழமை நேற்று, தங்கம் விலை கிராமுக்கு 100 ரூபாய் உயர்ந்து, 14,950 ரூபாய்க்கும், சவரனுக்கு 800 ரூபாய் அதிகரித்து, 1,19,600 ரூபாய்க்கும் விற்கப்பட்டது. வெள்ளி விலை ஒரு கிராம் 270 ரூபாய்க்கும், கிலோ 2 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
நேற்று விடுமுறை தினம் என்பதால் விலையில் மாற்றமில்லை. இந்நிலையில் இன்று (ஆகஸ்ட் 24) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 640 ரூபாய் அதிகரித்து ஒரு லட்சத்து 20 ஆயிரத்து 240 ரூபாய்க்கும், கிராமுக்கு 80 ரூபாய் அதிகரித்து 15,030 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை கிராமுக்கு 5 ரூபாய் அதிகரித்து 275 ரூபாய்க்கும், கிலோவுக்கு 15 ஆயிரம் ரூபாய் அதிகரித்து 2 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை ஆகிறது.
கடந்த கால தங்கம் விலை நிலவரங்களை அறிய இங்கே கிளிக் செய்யவும்