📅 Monday, 17 August 2026 IST | ஆவணி 1, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema June 24, 2026 09:31 PM

”வாயில கொழுக்கட்டையா இருக்கு”..." விஜய்க்கு வாழ்த்து சொல்லிட்டேன் .."

”வாயில கொழுக்கட்டையா இருக்கு”..." விஜய்க்கு வாழ்த்து சொல்லிட்டேன் .."

”வாயில கொழுக்கட்டையா இருக்கு”..." விஜய்க்கு வாழ்த்து சொல்லிட்டேன் .."– ரஜினி!

முதலமைச்சர் விஜய்க்கு வாழ்த்துக் கூறவில்லை என்று எழுந்த சர்ச்சைக்கு தற்போது விளக்கம் அளித்துள்ளார் நடிகர் ரஜினிகாந்த்.

தமிழ் சினிமாவின் தி ஒன் அண்ட் ஒன்லி சூப்பர் ஸ்டாராக கெரியரின் உச்சத்தில் இருப்பவர் ரஜினிகாந்த். கூலி படத்தைத் தொடர்ந்து, அடுத்தது தலைவரை இயக்கப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு இருக்கும் நிலையில், ஜெயிலர் 2, KHvsRK, தலைவர் 173 என பேக் டூ பேக் படங்கள் லைன் கட்டி நிற்கின்றன. ஜெயிலர் 2 ஷூட்டிங் முடிந்த நிலையில், கமலுடன் இணைந்து நடிக்கும் படத்துக்கான கிளிம்ஸூம் வெளியாகி தமிழ் சினிமா ரசிகர்களை குஷியாக்கியது. இப்படத்தில் யார் ஹீரோ, யார் வில்லன் என்பது மில்லியன் டாலர் கேள்வியாக இருக்கிறது.

இந்த நிலையில், அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் தலைவர் 173 படத்தின் அறிமுக விழா இன்று நடைபெற்றது.

அப்போது பேசிய ரஜினி, "பேச அழைக்கிறோம் எனச் சொன்னலே தயக்கமாக இருக்கிறது. காரணம், நான் பேசினால் மற்றவர்களுக்கும் பிரச்னை, எனக்கும் பிரச்னை. ஏதாவது கிளப்பிக்கொண்டே இருப்பார்கள். நான் சும்மா இருந்தால் இவர் என்ன பேசவே மாட்டேன் என்கிறார்? வாயில் என்ன கொழுக்கட்டை வைத்திருக்கிறாரா? என்பார்கள். பேசினால், "ஆமாம், இப்ப பேசு" எனக் கிண்டல் அடிப்பார்கள். ரொம்ப நாள் கழித்துதான் ஒன்றை தெரிந்துகொண்டேன், நம்மைப் பிடிக்காதவர்களுக்கு நாம் என்ன செய்தாலும் பிடிக்காது; நமக்குப் பிடித்தவர்களுக்கு நாம் செய்யும் எல்லாமும் பிடிக்கும் என நினைப்பது முட்டா ள்தனம். ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்” என்று தனது பாணியில் கலகலப்பாகவும் அதே சமயம் அதிரடியாக பேசினார்.

பின்னர் நிகழ்வில் கலந்துகொண்டு கிளம்பிய போது, "முதல்வர் விஜய்யின் பிறந்த நாளுக்கு ஏன் வாழ்த்துகளைத் தெரிவிக்கவில்லை?" ரஜினியிடம் பத்திரிக்கையாளர்கள் கேள்வி கேட்டனர். அதற்கு, ரஜினி, "பேசிவிட்டேன்... பேசிவிட்டேன்..." என பதிலளித்தார். இதனால், செல்போனில் அழைத்து முதல்வரை வாழ்த்தியுள்ளது தெரிய வந்துள்ளது.

படத்தை பொறுத்தவரை கமல் ஹாசன் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்திற்கு ’தர்மன்’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. டிராகன் படத்தை இயக்கிய அஷ்வத் மாரிமுத்து இயக்க, அனிருத் இசையமைக்க, ஒரு Investigative Thriller-ஆக இப்படம் உருவாக உள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது.

இப்படத்தின் போஸ்டரில், தலைவர் ரஜினிகாந்த் ‘டாக்டர்’ கெட்டப்பில் செம்ம மாஸா… கிளாஸாக இருக்கிறார். பேட்ட படத்திற்கு பிறகு ரஜினியுடன் மீண்டும் சிம்ரன் இணைகிறார். இவர்களுடன் ராஷி கண்ணாவும் நடிக்கிறார்.