📅 Thursday, 06 August 2026 IST | ஆடி 21, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Sports August 06, 2026 11:00 AM

“வைபவ் சூர்யவன்ஷி என் உலக டி20 ரெக்கார்டை முறியடிப்பார்”.. சாதனை படைத்த உடன் சொன்ன ஜோஸ் பட்லர்

“வைபவ் சூர்யவன்ஷி என் உலக டி20 ரெக்கார்டை முறியடிப்பார்”.. சாதனை படைத்த உடன் சொன்ன ஜோஸ் பட்லர்

“வைபவ் சூர்யவன்ஷி என் உலக டி20 ரெக்கார்டை முறியடிப்பார்”.. சாதனை படைத்த உடன் சொன்ன ஜோஸ் பட்லர்

லண்டன்: டி20 கிரிக்கெட் வரலாற்றில் அதிக ரன்கள் குவித்து உலக சாதனை படைத்துள்ள இங்கிலாந்து அணியின் ஜோஸ் பட்லர், தனது இந்த சாதனையை இந்தியாவின் இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி ஒரு நாள் முறியடிப்பார் என்று கூறி இருக்கிறார்.

'தி ஹண்ட்ரட்' கிரிக்கெட் தொடரில், மான்செஸ்டர் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்காக விளையாடிய ஜோஸ் பட்லர், வெல்ஷ் ஃபயர் அணிக்கு எதிராக 20 பந்துகளில் 51 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இதன் மூலம் டி20 கிரிக்கெட் வரலாற்றில் 522 போட்டிகளில் 14,833 ரன்கள் குவித்து, அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் பட்டியலில் கீரன் பொல்லார்டை (14,803 ரன்கள், 746 போட்டிகள்) முந்தி முதலிடம் பிடித்தார். இந்த பட்டியலில் வெஸ்ட் இண்டீஸின் கிறிஸ் கெய்ல் (14,562 ரன்கள்) 3வது இடத்தில் உள்ளார்.

இந்த வரலாற்று சாதனைக்குப் பிறகு பேசிய ஜோஸ் பட்லர், தனது சாதனையை முறியடிக்க வாய்ப்புள்ள வீரராக இந்தியாவின் இளம் வீரரான வைபவ் சூர்யவன்ஷியைக் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து பட்லர் கூறுகையில், "டி20 கிரிக்கெட்டில் உலகிலேயே அதிக ரன்கள் எடுத்த வீரர் என்று நினைப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. ஆனால், ஒரு நாள் யாராவது ஒருவர் இந்த சாதனையை கண்டிப்பாக முறியடிப்பார்கள். அப்படி முறியடிக்கப் போகும் அந்த வீரரின் பெயர் அநேகமாக சூர்யவன்ஷியாகத் தான் இருக்கும்" என்று கூறினார்.

மேலும் தனது ஆட்டம் குறித்துப் பேசிய பட்லர், "கிரிக்கெட் எவ்வளவு வேகமாக மாறுகிறது என்பது ஆச்சரியமாக இருக்கிறது. சில மாதங்களுக்கு முன்பு நான் ஃபார்ம் இன்றி தவித்தேன். ஆனால் கடந்த சில வாரங்களாக நான் மிகச் சிறப்பாக விளையாடி வருகிறேன். ஃபார்மை மீட்க தொடர்ந்து முயற்சிப்பதே முக்கியம்" என்றார்.

இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வெல்ஷ் ஃபயர் அணி 155 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து விளையாடிய மான்செஸ்டர் அணி டிம் செய்ஃபெர்ட் (62), பால் வால்டர் (37) மற்றும் ஜோஸ் பட்லர் (51) ஆகியோரின் அதிரடியால் 1 விக்கெட்டை மட்டுமே இழந்து இலக்கை எட்டி 9 விக்கெட் வித்தியாசத்தில் எளிய வெற்றி பெற்றது.