📅 Saturday, 03 October 2026 IST | புரட்டாசி 17, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Sports June 03, 2026 10:01 AM

வைபவ் சூர்யவன்ஷிக்கு சச்சின் தெண்டுல்கர் பாராட்டு

வைபவ் சூர்யவன்ஷிக்கு சச்சின் தெண்டுல்கர் பாராட்டு

2026 ஐபிஎல் தொடரில் குஜராத் அணியை வீழ்த்தி பெங்களூரு அணி சாம்பியன் பட்டம் வென்றது. ராஜஸ்தான் அணி பிளே ஆப் சுற்றில் தோல்வியடைந்தது.

இந்த நிலையில், ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தொடக்க ஆட் டக்காரரான வைபவ் சூர்யவன்ஷி அதிரடியில் அசத்தி அனைவரது கவ னத்தையும் ஈர்த்ததுடன் பல்வேறு சாதனைகளையும் படைத்தார். பீகாரை சேர்ந்த 15 வயது சூர்யவன்ஷி 16 ஆட்டங்களில் ஆடி ஒரு சதம், 5 அரை சதம் உள்பட 776 ரன்கள் குவித்து முதலிடம் பிடித்தார். இதில் 63 பவுண் டரியும், 72 சிக்சரும் அடங்கும்.

வைபவ் சூர்யவன்ஷிக்கு இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் பாராட்டு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது,

வைபவ் சூர்யவன்ஷி ரன்களையும் தாண்டி ஆட்டங்களில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தினார். அவர் களத்திற்கு வருவதற்கு நீண்ட நேரத்திற்கு முன்பே, எதிரணிகள் அவரைப் பற்றியும், மற்ற அணிகள் அவருக்காகவும் திட்டமிட்டன; ரசிகர்கள் அவருக்காகக் காத்திருந்தனர். எலிமினேட்டர் மற்றும் குவாலிபையர் ஆகிய இரண்டு போட்டிகளிலும், அவரால் வேகமாக ரன்களைக் குவிக்க முடிந்தது. மிக முக்கியமாக, அவர் ஒவ்வொரு முறையும் களத்திற்குள் நுழையும்போது, ​​அவரது பேட்டிங் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு ஒரு கூடுதல் நம்பிக்கையை அளிப்பதாகத் தோன்றியது. என தெரிவித்துள்ளார்.