📅 Friday, 02 October 2026 IST | புரட்டாசி 16, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Sports May 27, 2026 08:32 PM

வெளியேறியது ஆஸ்திரேலிய அணி * ஜிம்பாப்வே அணி கலக்கல்

வெளியேறியது ஆஸ்திரேலிய அணி * ஜிம்பாப்வே அணி கலக்கல்

பல்கேகெலே: 'டி-20' உலக கோப்பை தொடரில் 'சூப்பர்-8' சுற்று வாய்ப்பை இழந்து வெளியேறியது ஆஸ்திரேலிய அணி.

'டி-20' உலக கோப்பை தொடரில் 'பி' பிரிவில் இடம் பெற்ற இலங்கை அணி 'சூப்பர்-8' சுற்றுக்கு ஏற்கனவே முன்னேறியது. அடுத்த மூன்று இடத்தில் ஜிம்பாப்வே (4), ஆஸ்திரேலியா (2), அயர்லாந்து (2) அணிகள் இருந்தன. 3 போட்டியில் தோற்ற ஓமன், தொடரில் இருந்து வெளியேறியது.

நேற்று இலங்கையின் பல்லேகெலே மைதானத்தில் நடக்க இருந்த லீக் போட்டியில், ஜிம்பாப்வே, அயர்லாந்து அணிகள் மோத இருந்தன.

இப்போட்டியின் முடிவுக்கு ஏற்ப, ஆஸ்திரேலிய அணியின் அடுத்தசுற்று நிலை தெரியவரலாம் என்ற நிலை இருந்தது. இதனிடையே, பல்லேகெலேயில் நேற்று தொடர்ந்து மழை பெய்தது. இது நீடித்ததால், 'டாஸ்' கூட போடப்படாமல் போட்டியை ரத்து செய்வதாக அம்பயர்கள் அறிவித்தனர். இரு அணிக்கும் தலா ஒரு புள்ளி பகிர்ந்து தரப்பட்டன.

ஜிம்பாப்வே எப்படி

இதையடுத்து ஜிம்பாப்வே அணி 5 புள்ளியுடன், இரண்டாவது இடத்தை உறுதி செய்து, 'சூப்பர்-8' சுற்றுக்கு முன்னேறியது. அயர்லாந்து அணி (3 புள்ளி) 3வது இடம் பிடித்தது. பிப். 20 ல் ஆஸ்திரேலியா, ஓமன் அணிகள் மோத உள்ளன. இப்போட்டியின் முடிவு எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தாது. ஏற்கனவே, இரு அணிகள் அடுத்த சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை இழந்து விட்டன.

2028ல் வாய்ப்பு

கடந்த 2024 'டி-20' உலக கோப்பை தொடருக்கு ஜிம்பாப்வே அணி தகுதிபெறவில்லை. இம்முறை, 7 வது அணியாக 'சூப்பர்-8' சுற்றுக்குள் நுழைந்தது. தவிர, 2028ல் ஆஸ்திரேலியா, நியூசிலாந்தில் நடக்கவுள்ள 'டி-20' உலக கோப்பை தொடருக்கும் தகுதி பெற்றது.